நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றன. கடந்த வாரத்தில் தொடர்ந்து புதிய உச்சத்தினை எட்டி வந்த நிலையில், இந்திய சந்தைகள் இன்று தொடக்கத்திலேயே சரிவினைக் கண்டது.
எனினும் தற்போது சற்று ஏற்றம் கண்டும் காணப்படுகின்றது. கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் வரலாற்று உச்சத்தினை கண்டு முடிவடைந்துள்ளது.
இதனையடுத்து ஆசிய சந்தைகளும் சற்று ஏற்ற இறக்கத்தில் காணப்பட்டது.
இந்திய சந்தைகள் தொடக்கம்
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 181.16 புள்ளிகள் அதிகரித்து, 55,763.74 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 28.80 புள்ளிகள் அதிகரித்து, 16,534.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 119.91 புள்ளிகள் குறைந்து, 55,462 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 37.80 புள்ளிகள் குறைந்து, 16,525 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதே 897 பங்குகள் ஏற்றத்திலும், 782 பங்குகள் சரிவிலும், 97 பங்குகள் மாற்றமில்லாமலும் காண்ப்படுகின்றது.
இன்டெக்ஸ் நிலவரம்
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள நிஃப்டி ஆட்டோ, பேங்க் ஐடி, பிஎஸ்இ ஆயில் & கேஸ் உள்ளிட்ட குறியீடுகள் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றது. மற்ற குறியீடுகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள டாடா கன்சியூமர் புராடக்ட்ஸ், டெக் மகேந்திரா, ஏசியன் பெயிண்ட்ஸ், நெஸ்ட்லே,ஹெச்.யு.எல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே இந்தஸிந்த் வங்கி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஹெச்.டி.எஃப்.சி, ஆக்ஸிஸ் வங்கி, எம்& எம், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டெக் மகேந்திரா, ஏசியன் பெயிண்ட்ஸ், நெஸ்ட்லே, ஹெச்.யு.எல், பவர் கிரிட் கார்ப் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே இந்தஸிந்த் வங்கி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, எம்& எம், ஆக்ஸிஸ் வங்கி, மாருதி சுசூகி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசராகவும் உள்ளன.
ரூபாய் மதிப்பு
இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்று அதிகரித்து, 74.23 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது முந்தைய அமர்வில் 74.25 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 50.53 புள்ளிகள் அதிகரித்து, 55,633.11 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 11.15 புள்ளிகள் அதிகரித்து, 16,574.20 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications