இந்திய பங்கு சந்தைகள் இந்த வாரத்தின் 2வது வர்த்தக நாளான இன்று, தொடக்கத்தில் சற்று ஏற்றத்தில் காணப்பட்டன.
கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் சற்று ஏற்றத்தில் முடிவடைந்ததையடுத்து, ஆசிய சந்தைகள் பலவும் ஏற்றத்தில் காணப்படுகின்றன. இதனை தொடர்ந்து இந்திய சந்தையும் ஏற்றத்தில் காணப்படுகின்றது.
எனினும் தொடர்ந்து அதிகரித்து வரும் ஓமிக்ரான் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற அச்சமும் இருந்து வருகின்றது.
முதலீடுகள் வரத்து?
என்.எஸ்.இ தரவுகளின் படி, ஜனவரி 17 நிலவரப்படி, அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் 855.47 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர். இதே உள்நாட்டு முதலீட்டாளர்கள் 115.31 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.இந்த போக்கு வரும் நாட்களிலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடக்கம் எப்படி?
இதற்கிடையில் இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 236.90 புள்ளிகள் அதிகரித்து, 61,545.81 புள்ளிகளாகவும், நிஃப்டி 106.20 புள்ளிகள் அதிகரித்து, 18,414.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 117.34 புள்ளிகள் அதிகரித்து, 61,426.25 புள்ளிகளாகவும், நிஃப்டி 35.60 புள்ளிகள் அதிகரித்து, 18,343 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1555 பங்குகள் ஏற்றத்திலும், 472 பங்குகள் சரிவிலும், 105 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ் நிலவரம்
சென்செக்ஸ் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சரிவிலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி 50, பிஎஸ்இ சென்செக்ஸ், நிஃப்டி ஐடி, பிஎஸ்இ ஸ்மால் கேப், பிஎஸ்இ மிட் கேப், நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ கேப்பிட்டல் குட்ஸ், பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி, பிஎஸ்இ ஹெல்த்கேர், பிஎஸ்இ மெட்டல்ஸ், பிஎஸ்இ டெக் உள்ளிட்ட குறியீடுகள் சரிவில் காணப்படுகின்றன. மற்ற குறியீடுகள் மாற்றமின்றி கானப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஆக்ஸிஸ் வங்கி, பிபிசிஎல், பஜாஜ் பைனான்ஸ், சன் பார்மா உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினராகவும், இதே ஈச்சர் மோட்டார்ஸ், மாருதி சுசுகி, அல்ட்ராடெக் சிமெண்ட், டாடா கன்சியூமர் புராடக்ட்ஸ், டாடா ஸ்டீல் உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளது.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள சன் பார்மா,ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஹெச். டி.எஃப்.சி வங்கி, பஜாஜ் பின்செர்வ் உள்ளிட்ட பங்குகள் மட்டுமே டாப் கெயினராகவும், இதே போல மாருதி சுசுகி, அல்ட்ராடெக் சிமெண்ட், டாடா ஸ்டீல், ஹெச் யு எல், ஹெச் சி எல் டெக் உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம்
தற்போது 9.55 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 84.25 புள்ளிகள் குறைந்து, 61,224.66 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 38.45 புள்ளிகள் குறைந்து, 18,269.65 புள்ளிகளாகவும் காணப்படுகின்றது. சென்செக்ஸ் தொடர்ந்து 61,000 புள்ளிகளுக்கு மேலாகவே இருந்து வருகின்றது. தொடக்கத்தில் ஏற்றத்தில் இருந்த சந்தையானது, தற்போது மீண்டும் சரிவினைக் கண்டு வருகின்றது.
More From GoodReturns

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?



Click it and Unblock the Notifications