இந்திய பங்கு சந்தைகள் இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்றும், தொடர்ந்து ஏற்றத்தில் காணப்படுகின்றன.
இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் சந்தோஷத்தினை ஏற்படுத்தியுள்ளது. எனினும் தொடர்ந்து பரவி வரும் ஓமிக்ரான் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டி அதிகரிப்பது குறித்தான முக்கிய முடிவினை வரவிருக்கும் வாரத்தில் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலத்த சரிவில் சர்வதேச சந்தைகள்
அமெரிக்க சந்தையானது கடந்த அமர்வில் பலத்த சரிவினைக் கண்டு முடிவடைந்துள்ளது. இதனையடுத்து இன்று தொடக்கத்தில் ஆசிய சந்தைகள் பலவும் சரிவிலேயே தொடங்கியது. இதன் எதிரொலி இந்திய சந்தையிலும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக தற்போது ஏற்றத்தில் இருந்தாலும், இந்திய சந்தையானது சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தொடர்ச்சியாக ஏற்றத்தினை கண்டு வரும் நிலையில், புராபிட் புக்கிங் செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தொடக்கம் எப்படி?
இதற்கிடையில் இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே இந்திய சந்தைகள் சரிவில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 91.84 புள்ளிகள் குறைந்து, 60,303.79 புள்ளிகளாகவும், நிஃப்டி 31 புள்ளிகள் குறைந்து, 17,972.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
எனினும் தொடக்கத்தில் சற்று அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 150.95 புள்ளிகள் அதிகரித்து, 60,546.58 புள்ளிகளாகவும், நிஃப்டி 45.50 புள்ளிகள் அதிகரித்து, 18,048.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1799 பங்குகள் ஏற்றத்திலும், 515 பங்குகள் சரிவிலும், 85 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ் நிலவரம்
சென்செக்ஸ் நிஃப்டி குறியீட்டில் உள்ள பேங்க் நிஃப்டி, நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ கேப்பிட்டல் குட்ஸ், பிஎஸ்இ மெட்டல்ஸ், நிஃப்டி பிஎஸ்இ உள்ளிட்ட குறியீடுகள் சரிவில் காணப்படுகின்றன, மற்ற அனைத்து குறியீடுகளும் ஏற்றத்தில் கானப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி ஐடி மட்டும் 1% மேலாக ஏற்றத்தில் காணப்படுகின்றன. மற்ற குறியீடுகள் 1% கீழாக ஏற்றத்திலும் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள ஹெச்சிஎல் டெக், என் டி பி சி, டெக் மகேந்திரா, ஹெச் டி எஃப் சி, டாடா கன்சியூமர் புராடக்ட்ஸ் உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினராகவும், இதே டாடா ஸ்டீல், ஜே.எஸ்.டபள்யூ, பஜாஜ் பைனான்ஸ், அதானி போர்ட்ஸ், கோடக் மகேந்திரா உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளது.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஹெச்சிஎல் டெக், ஹெச் டி எஃப் சி, என் டி பி சி,சன் பார்மா, டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் மட்டுமே டாப் கெயினராகவும், இதே போல டாடா ஸ்டீல், பஜாஜ் பைனான்ஸ், கோடக் மகேந்திரா, ஏசியன் பெயிண்ட்ஸ், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம்
தற்போது 10 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 9.94 புள்ளிகள் குறைந்து, 60,385.69 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 8.65 புள்ளிகள் குறைந்து, 17,994.65 புள்ளிகளாகவும் காணப்படுகின்றது. சென்செக்ஸ் தொடர்ந்து 60,000 புள்ளிகளுக்கு மேலாகவே இருந்து வருகின்றது. தொடக்கத்தில் ஏற்றத்தில் இருந்த சந்தையானது, தற்போது மீண்டும் சரிவினைக் காணத் தொடங்கியுள்ளது.
More From GoodReturns

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications