முதல் நாளே பெருத்த ஏமாற்றம்.. சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி.. ஏன்..!

இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, பெரியளவில் மாற்றமில்லாவிட்டாலும் சரிவிலேயே காணப்படுகின்றது.

எனினும் தொடக்கத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட சற்று ஏற்றத்திலேயே தொடங்கின.

உக்ரைன் ரஷ்ய பிரச்சனைகள் தொடர்ந்து நீடித்துக் கொண்டுள்ள நிலையில், தொடர்ந்து அது சர்வதேச பொருளாதாரத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

 சர்வதேச சந்தைகள்

சர்வதேச சந்தைகள்

அமெரிக்காவின் மத்திய வங்கியானது எதிர்பார்த்ததை போலவே வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ள நிலையில், கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து அமெரிக்க பங்கு சந்தையானது ஏற்றத்தில் முடிவடைந்து வருகின்றது. இதன் எதிரொலி டாலரின் மதிப்பும் ஏற்றத்தில் காணப்படுகின்றது. இதற்கிடையில் ஆசிய சந்தைகள் பல ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றன. இதற்கிடையில் தான் இந்திய சந்தையிலும் தொடர்ந்து ஏற்ற இறக்கம் காணப்படுகின்றது.

 முதலீடுகள் வெளியேற்றம்

முதலீடுகள் வெளியேற்றம்

மார்ச் 17 நிலவரப் படி, அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ச்சியான இரண்டாவது நாளாக பங்குகளில் முதலீடுகளை அதிகரித்துள்ளனர். இது கடைசியாக மார்ச் 17 அன்று 2800.14 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். அதேசமயம் உள்நாட்டு முதலீட்டாளர்கள், 678.45 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளதாக என்.எஸ்.இ தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

 தொடக்கம் எப்படி?

தொடக்கம் எப்படி?


இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சென்செக்ஸ் 309.94 புள்ளிகள் அதிகரித்து, 58,173.87 புள்ளிகளாகவும், நிஃப்டி 101.70 புள்ளிகள் அதிகரித்து,17,388.70 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 166.33 புள்ளிகள் அதிகரித்து, 58,030.26 புள்ளிகளாகவும், நிஃப்டி 46.50 புள்ளிகள் அதிகரித்து, 17,333.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 1633 பங்குகள் ஏற்றத்திலும், 602 பங்குகள் சரிவிலும், 124 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

 

இன்டெக்ஸ்

இன்டெக்ஸ்

சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள பல குறியீடுகள் சரிவில் காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி 50, பிஎஸ்இ சென்செக்ஸ், பேங்க் நிஃப்டி, பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி, பிஎஸ்இ ஆயில் & கேஸ், நிஃப்டி பிஎஸ்இ உள்ளிட்ட குறியீடுகள் சற்று சரிவில் காணப்படுகின்றன. மற்ற குறியீடுகள் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றன.

 நிஃப்டி  குறியீடு

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீட்டில் உள்ள ஹிண்டால்கோ, மாருதி சுசுகி, ஓ.என்.ஜி.சி, சன் பார்மா, சிப்லா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே கோடக் மகேந்திரா, ஏசியன் பெயிண்ட்ஸ், ஹெச்.யு.எல், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

 சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள மாருதி சுசுகி,சன் பார்மா, விப்ரோ, டாடா ஸ்டீல், டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாக உள்ளன. இதே கோடக் மகேந்திரா, ஹெச்.யு.எல், ஏசியன் பெயிண்ட்ஸ், இந்தஸ்இந்த் வங்கி, எஸ்பிஐ உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

 தற்போது நிலவரம்

தற்போது நிலவரம்

தற்போது 10.01 மணி நிலவரப்படி, தற்போது சென்செக்ஸ் 201.64 புள்ளிகள் குறைந்து, 57662.29 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 45.55 புள்ளிகள் குறைந்து, 17,241.50 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+