தடுமாறும் சென்செக்ஸ், நிஃப்டி.. என்ன காரணம்..!

நடப்பு வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான இன்று, பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில், இந்திய சந்தைகள் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றன.

கடந்த சில அமர்வுகளாக பலத்த சரிவினைக் கண்டு வந்த இந்திய சந்தைகள், இன்று சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. இதற்கிடையில் அமெரிக்க சந்தைகள் பெரியளவில் மாற்றமின்றி சற்று ஏற்றத்தில் முடிவடைந்தது.

எனினும் சீனாவில் நிலக்கரி பற்றாக்குறையால் நிலவி வரும் மின்வெட்டு காரணமாக உற்பத்தி விகிதம் சரியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவும் ஒரு காரணம்

இதுவும் ஒரு காரணம்

இதற்கிடையில் தொடர்ந்து இரண்டாவது மாதமாக சீனாவின் உற்பத்தி விகிதம் குறைந்துள்ளதை தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. மேலும் தற்போது ஆசிய சந்தைகளில் நிலவி வரும் மூலதன பொருட்கள் பற்றாக்குறை, குறிப்பாக சிப் பற்றாக்குறையால் உற்பத்தி விகிதம் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிடையில் இன்று ஆசிய சந்தைகள் பலவும் தடுமாற்றத்தில் காணப்படுகின்றன.

தொடக்கம் எப்படி?

தொடக்கம் எப்படி?

இந்திய சந்தைகளை பொறுத்தவரையில் இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில், சென்செக்ஸ் 216.84 புள்ளிகள் அதிகரித்து, 59,630.11 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 24.50 புள்ளிகள் அதிகரித்து, 17,735.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதனையடுத்து தொடக்கத்திலும் சற்று அதிகரித்து தான் தொடங்கியது. குறிப்பாக சென்செக்ஸ் 43.29 புள்ளிகள் அதிகரித்து, 59,456.56 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 8.10 புள்ளிகள் அதிகரித்து, 17,719.40 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1326 பங்குகள் ஏற்றத்திலும், 340 பங்குகள் சரிவிலும், 80 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

இன்டெக்ஸ் நிலவரம்

இன்டெக்ஸ் நிலவரம்

இதனையடுத்து இன்றும் பல குறியீடுகள் சரிவிலேயே காணப்படுகின்றன. குறிப்பாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள நிஃப்டி 50, பிஎஸ்இ சென்செக்ஸ், நிஃப்டி ஐடி, பிஎஸ்இ ஆயில் & கேஸ், பிஎஸ்இ மெட்டல்ஸ், நிஃப்டி பிஎஸ்இ ஸ்மால் கேப் உள்ளிட்ட குறியீடுகள் மாற்றமின்றி காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீட்டில் உள்ள பார்தி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், இந்தஸிந்த் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஓ.என்.ஜி.சி, பவர் கிரிட் கார்ப், ஐஓசி, ஈச்சர் மோட்டார்ஸ், ஸ்ரீ சிமெண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பார்தி ஏர்டெல், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், எஸ்பிஐ, இந்தஸிந்த் வங்கி, பஜாஜ் பின்செர்வ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பவர் கிரிட் கார்ப், பஜாஜ் ஆட்டோ, கோடக் மகேந்திரா வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட், டெக் மகேந்திரா வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சந்தையில் தற்போதைய நிலவரம்

சந்தையில் தற்போதைய நிலவரம்

இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 81.59 புள்ளிகள் குறைந்து, 59,346.39 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 30.4 புள்ளிகள் குறைந்து, 17,680.90 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

இதற்கிடையில் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பானது, 11 பைசா சரிந்து, 74.26 ரூபாயாக தொடங்கியுள்ளது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+