காளையா கரடியா.. போராட்டத்தில் சென்செக்ஸ், நிஃப்டி.. என்ன காரணம்..!

இந்திய பங்கு சந்தைகள் மூன்றாவது வர்த்தக நாளான இன்று, இந்த வருடத்தில், இந்த மாதத்தில், இந்த வாரத்தில் இறுதி கட்டத்தினை எட்டியுள்ளது.

இதற்கிடையில் கடந்த அமர்வில் அமெரிக்க சந்தையில் ஏற்ற இறக்கத்தில் முடிவடைந்ததையடுத்து, ஆசிய சந்தைகள் பலவும் இன்று தொடக்கத்தில் சரிவிலேயே காணப்பட்டது.

இதன் எதிரொலியாக இன்று தொடக்கத்தில் சரிவிலேயே தொடங்கியுள்ளது. இதற்கிடையில் தற்போது சற்று ஏற்றம் கண்டுள்ளது.

கவனிக்க வேண்டிய காரணிகள்

கவனிக்க வேண்டிய காரணிகள்

பல சர்வதேச நாடுகளிலும் ஓமிக்ரான் பரவி வரும் நிலையில், பொருளாதாரம் என்னவாகுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.இதற்கிடையில் இந்திய சந்தையில் நாளை எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி என்பதால் சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலீடுகள் வரத்து

முதலீடுகள் வரத்து

தொடர்ந்து அன்னிய முதலீடுகள் என்பது சமீப நாட்களாக வெளியேறியே வந்த நிலையில், டிசம்பர் 28 நிலவரப்படி, அன்னிய முதலீட்டாளர்கள் 207.31 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். இது சந்தைக்கு சாதகமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இதே உள்நாட்டு முதலீட்டாளார்கள் 567.47 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். ஆக இதுவும் சந்தைக்கு சாதகமான ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகின்றது.

தொடக்கம் எப்படி?

தொடக்கம் எப்படி?

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சந்தைகள் ஏற்றத்தில் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 173.53 புள்ளிகள் அதிகரித்து, 58,071.01 புள்ளிகளாகவும், நிஃப்டி 49.70 புள்ளிகள் குறைந்து, 17,183.60 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

இதனையடுத்து தொடக்கத்திலும் சற்று சரிவில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 136.33 புள்ளிகள் குறைந்து, 57,761.15 புள்ளிகளாகவும், நிஃப்டி 39.50 புள்ளிகள் குறைந்து, 17,193.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1371 பங்குகள் ஏற்றத்திலும், 660 பங்குகள் சரிவிலும், 94 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

இன்டெக்ஸ் நிலவரம்

இன்டெக்ஸ் நிலவரம்

சென்செக்ஸ் நிஃப்டி குறியீட்டில் உள்ள பல குறியீடுகளும் சரிவில் காணப்படுகின்றன. குறிப்பாக பிஎஸ்இ சென்செக்ஸ், நிஃப்டி 50, நிஃப்டி ஐடி, நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், பிஎஸ்இ மெட்டல்ஸ்,பிஎஸ்இ டெக்,நிஃப்டி பிஎஸ்இ உள்ளிட்ட குறியீடுகள் சற்று சரிவில் காணப்படுகின்றன. மற்றவை பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது.

நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்

நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்

நிஃப்டி குறியீட்டில் உள்ள இந்தஸ் இந்த் வங்கி,டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டீஸ், ஐசிஐசிஐ வங்கி, சிப்லா, சன் பார்மா உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினராகவும், இதே பவர் கிரிட் கார்ப், என் டி பி சி, கோல் இந்தியா, டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளது.

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள இந்தஸ்இந்த் வங்கி, டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டீஸ், ஐசிஐசிஐ வங்கி, சன் பார்மா, ரிலையன்ஸ் உள்ளிட்ட பங்குகள் மட்டுமே டாப் கெயினராகவும், இதே பவர் கிரிட் கார்ப், என் டி பி சி, டாடா ஸ்டீல், ஹெச் டி எஃப் சி வங்கி, ஐடிசி உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

தற்போதைய நிலவரம்

தற்போதைய நிலவரம்

தற்போது (9.43 மணி நிலவரப்படி) சென்செக்ஸ் 120.93 புள்ளிகள் அதிகரித்து, 58,018.41 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 32.05 புள்ளிகள் அதிகரித்து, 17,265.30 புள்ளிகளாகவும் காணப்படுகின்றது. இன்று பார்மா பங்குகள், ரியால்டி பங்குகள் கவனிக்க வேண்டிய பங்குகளாக உள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+