மீண்டும் ஏற்ற பாதைக்கு திரும்பிய சந்தைகள்.. 20% ஏற்றம் கண்ட ஜீ என்டர்டெயின்மெண்ட்..என்ன காரணம்..!

நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று, பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில், இந்திய சந்தைகள் இன்று சற்று ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றன.

தொடக்கத்தில் சற்று சரிவில் தொடங்கியிருந்தாலும், சந்தையானது மீண்டும் ஏற்ற பாதைக்கு திரும்பியுள்ளது. எனினும் பெரியளவில் ஏற்றம் காணவில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

ஆக இந்த ஏற்றமானது இப்படியே தொடருமா? அல்லது மீண்டும் சரிவினைக் சந்திக்குமா? அன்னிய முதலீடுகள் வரத்து என்பது வலுவாக இருந்தாலும், தொடர்ந்து உள்நாட்டு முதலீட்டாளார்கள் வெளியேறி வருகின்றனர்.

ஆசிய சந்தைகள் சரிவு

ஆசிய சந்தைகள் சரிவு

மொத்தத்தில் சந்தை எப்படியிருக்கும் வாருங்கள் பார்க்கலாம். கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் பெரியளவில் மாற்றமில்லாமல் முடிவடைந்தது. எனினும் சீனாவின் எவர்கிராண்டே கட்டுமான நிறுவனம் திவாலாகும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக ஆசிய சந்தைகள் பலவும் சரிவினைக் கண்டுள்ளன. இதற்கிடையில் இந்திய சந்தையும் தடுமாற்றத்தில் காணப்படுகின்றது.

இந்திய சந்தை நிலவரம்

இந்திய சந்தை நிலவரம்

எப்படியிருப்பினும் அமெரிக்காவில் வரவிருக்கும் நாட்களில் முக்கிய டேட்டாக்கள் வெளியாகவிருக்கும் நிலையில், இந்திய சந்தைக்கு முதலீடுகள் வரத்து அதிகரித்துள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்ட உள்நாட்டு முதலீட்டாளார்கள் லாபத்தினை புக் செய்து வருகின்றனர். குறிப்பாக அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் குறித்த அறிவிப்புகள் வருமோ? அதோடு ECB கூட்டத்தினையும் கவனித்து வருவதால் வர்த்தகர்கள் இதனை கவனித்து வருகின்றனர்.

வர்த்தகர்கள் கவனம்

வர்த்தகர்கள் கவனம்

இதற்கிடையில் பல காரணிகளும் சந்தைக்கு எதிராகவே காணப்படும் நிலையில், சந்தையானது சரிவினை காணலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. அதோடு சந்தையானது தொடர்ந்து புதிய உச்சம் தொட்டு வந்த நிலையில் வர்த்தகர்கள் புராபிட் புக்கிங் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக சந்தையானது இன்னும் சற்று அழுத்தத்தில் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே தொடர்ந்து ஏற்றத்தினை கண்டு வந்த இந்திய சந்தைகள், நேற்று சரிவினைக் கண்ட நிலையில், இன்றும் சற்று தடுமாற்றத்தில் காணப்படுகிறது. இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சென்செக்ஸ் 153.31 புள்ளிகள் அதிகரித்து, 59,158.58 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 37.80 புள்ளிகள் அதிகரித்து, 17,349 புள்ளிகளாகவும் காணப்பட்டது. எனினும் தொடக்கத்தில் சென்செக்ஸ் 33.84 புள்ளிகள் குறைந்து, 58,971.43 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 11.80 புள்ளிகள் குறைந்து, 17,550 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1,302 பங்குகள் ஏற்றத்திலும், 408 பங்குகள் சரிவிலும், 97 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

இன்டெக்ஸ் நிலவரம்

இன்டெக்ஸ் நிலவரம்

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் ஏற்றத்தில் காணப்படுகின்றன. எனினும் பேங்க் நிஃப்டி, பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி, பிஎஸ்இ மெட்டல்ஸ் சரிவில் காணப்படுகின்றன. அதே சமயம் பிஎஸ்இ டெக், பிஎஸ்இ உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாகவும் காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீட்டில் உள்ள டெக் மகேந்திரா, டாடா மோட்டார்ஸ், என்.டி.பி.சி, ஹெச்.சி.எல் டெக், பிபிசிஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஓ.என்.ஜி.சி, நெஸ்லே, ஹெச்.டி.எஃப்.சி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, கோல் இந்தியா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டெக் மகேந்திரா, என்.டி.பி.சி, ஹெச்.சி.எல் டெக், இந்தஸிந்த் வங்கி, ரிலையன்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்.டி.எஃப்.சி, நெஸ்லே, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்.யு.எல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

டாப் கெயினரான ஜீ என்டர்டெயின்மென்ட்

டாப் கெயினரான ஜீ என்டர்டெயின்மென்ட்

ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 20% அதிகரித்து அப்பர்ன் சர்க்யூட் ஆகியுள்ளது. இது இந்த நிறுவனம் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைக்க கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்துள்ளதையடுத்து, இந்த அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது. இது 52 வார உச்சமான 306.75 ரூபாயினை எட்டியுள்ளது. இதற்கிடையில் இன்று ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இது குறித்த முக்கிய அறிவிப்புகள் இன்று வெளியாகலாம் என்ற கருத்தும் நிலவி வருகின்றது.

சந்தையில் தற்போதைய நிலவரம்

சந்தையில் தற்போதைய நிலவரம்

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது சற்று குறைந்து, 73.74 ரூபாயாக சரிவில் காணப்படுகின்றது. இது கடந்த அமர்விலும் 73.74 முடிவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 113.02 புள்ளிகள் அதிகரித்து, 59,120.35 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 27.7 புள்ளிகள் அதிகரித்து, 17,589.70 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+