பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டினை நேற்று தாக்கல் செய்தார். இதில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புகள் வெளியானது. இதற்கிடையில் இந்த பட்ஜெட்டின் போது பங்கு சந்தையானது ஏற்றத்தில் முடிவடைந்தது. முந்தைய 10 பட்ஜெட்டுகளின் போது, 6 அமர்வுகளில் இந்திய சந்தையானது சரிவிலேயே காணப்பட்டது. .
கடந்த அமர்வில் அமெரிக்க டாலரின் மதிப்பானது மீண்டும் ஏற்றம் கண்ட நிலையில், அமெரிக்க பங்கு சந்தையானது உச்சம் தொட்டது. குறிப்பாக எனர்ஜி இன்டெக்ஸ் பல வருடங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தினை எட்டியது.
இதன் எதிரொலியாக ஆசிய சந்தைகள் பலவும் உச்சம் தொட்டன. இதற்கிடையில் தான் இந்திய பங்கு சந்தையும் ஏற்றத்தில் காணப்படுகின்றது.
முதலீடுகள் நிலவரம்
என்.எஸ்.இதரவுகளின் படி, பிப்ரவரி 1 அன்று, அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் 21.79 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர். அதே சமயம் 1597.70 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை உள்நாட்டு முதலீட்டாளர்கள் வாங்கியுள்ளனர். கடந்த வாரங்களில் தொடர்ச்சியாக அன்னிய முதலீடுகள் வெளியேறி வந்தது குறிப்பிடத்தக்கது.
தொடக்கம் எப்படி?
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சென்செக்ஸ் 365.59 புள்ளிகள் அதிகரித்து, 59,228.16 புள்ளிகளாகவும், நிஃப்டி 62.80 புள்ளிகள் அதிகரித்து, 17,514 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
தொடக்கத்தில் சென்செக்ஸ் 493.27 புள்ளிகள் அதிகரித்து, 59,355.84 புள்ளிகளாகவும், நிஃப்டி 144.30 புள்ளிகள் அதிகரித்து, 17,721.10 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடியயில் 1204 பங்குகள் ஏற்றத்திலும், 483 பங்குகள் சரிவிலும், 85 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்படுகின்றது.
இன்டெக்ஸ் & நிஃப்டி குறியீடு
சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் ஏற்றத்திலேயே காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீட்டில் உள்ள பஜாஜ் பின்செர்வ், இந்தஸ்இந்த் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், கோடக் மகேந்திரா, ஈச்சர் மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டெக் மகேந்திரா, பிரிட்டானியா, அதானி போர்ட்ஸ், ஹெச்.யு.எல், சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பஜாஜ் பின்செர்வ், இந்தஸ்இந்த் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், கோடக் மகேந்திரா, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே டெக் மகேந்திரா, ஹெச்.யு.எல், சன் பார்மா, லார்சன் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம்
10.15 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 495.27 புள்ளிகள் அதிகரித்து, 59,335.84 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 143.35 புள்ளிகள் அதிகரித்து, 17,720.20 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications