நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில், இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன.
கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் சற்று சரிவில் முடிவடைந்திருந்தாலும், ஆசிய சந்தைகள் பலவும் ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றன. இதன் எதிரொலி இந்திய சந்தையிலும் காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் நாளை எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி என்பதால் சந்தையில், ஏற்ற இறக்கத்தில் இருக்கலாம். இதனால் சந்தையில் இன்றும் நாளையும் ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம்.
முதலீடுகள் வெளியேற்றம்
நவம்பர் 23 நிலவரப்படி, கடந்த அமர்வில் 4,477.06 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை அன்னிய முதலீட்டாளார்கள் விற்றும், உள்நாட்டு முதலீட்டாளார்கள் 1,412.05 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கினை விற்றும் வெளியேறியுள்ளனர்.
இந்திய சந்தைகள் தொடக்கம்
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சென்செக்ஸ் 126.99 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 58,791.32 புள்ளிகளாகவும், நிஃப்டி 3.20 புள்ளிகள் அதிகரித்து, 17,506.50 புள்ளிகளாகவும் ஏற்றம் கண்டு காணப்படுகிறது. இதனையடுத்து சென்செக்ஸ் 63.10 புள்ளிகள் அதிகரித்து, 58,727.43 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 31.50 புள்ளிகள் அதிகரித்து, 17,534.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1480 பங்குகள் ஏற்றத்திலும், 312 பங்குகள் சரிவிலும், 81 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ் நிலவரம்
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகளும் சரிவில் காணப்படுகின்றன. குறிப்பாக பிஎஸ்இ டெக், பிஎஸ்இ மெட்டல்ஸ், பிஎஸ்இ ஹெல்த்கேர், பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி, பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், நிஃப்டி ஆட்டோ, நிஃப்டி ஐடி உள்ளிட்ட குறியீடுகள் சரிவில் காணப்படுகின்றன. பிஎஸ்இ ஆயில் & கேஸ், நிஃப்டி பி.எஸ்.இ 1% மேலாக ஏற்றம் கண்டு காணப்படுகின்றது.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள அதானி போர்ட்ஸ், ஓ.என்.ஜி.சி, பார்தி ஏர்டெல், கோல் இந்தியா, எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே மாருதி சுசுகி, இன்ஃபோசிஸ், டிவிஸ் லேப்ஸ், பஜாஜ் பின்செர்வ், டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பார்தி ஏர்டெல், பவர் கிரிட் கார்ப், என்.டி.பி.சி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஹெச்.சி.எல் டெக் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே மாருதி சுசுகி, டெக் மகேந்திரா, பஜாஜ் பின்செர்வ், இன்ஃபோசிஸ், டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சந்தையில் தற்போதைய நிலவரம்
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது, 11 பைசா குறைந்து, 74.53 ரூபாயாக காணப்படுகின்றது.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 208.50 புள்ளிகள் அதிகரித்து, 58,872.83 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 70.25 புள்ளிகள் அதிகரித்து, 17,573.60 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
More From GoodReturns

சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!

ஒரே நாளில் ரூ14 லட்சம் கோடிக்கு மேல் லாபம்! சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்!ஏன் தெரியுமா?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

டிரம்ப் கொடுத்த ஸ்பீச்: ரத்தக்களரியான பங்குச் சந்தை? சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!



Click it and Unblock the Notifications