நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று, பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில், இந்திய சந்தைகள் இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன.
இன்று வெளியாகவிருக்கும் அமெரிக்காவில் வேலை வாய்ப்பு குறித்த தரவுகளையடுத்து, சந்தையில் பெரிய அளவில் மாற்றம் காணவில்லை. இதனையடுத்து டாலரின் மதிப்பு அதன் உச்சத்தின் அருகிலேயே மாற்றமில்லாமல் காணப்படுகிறது.
அதோடு தொடர்ச்சியாக அமெரிக்காவில் ஐந்தாவது நாளாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை, இயற்கை எரிவாயு மற்றும் நிலக்கரி விலை உள்ளிட்ட தொடர்ந்து தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
பணவீக்கம் குறித்த அச்சம்
அதேபோல பிரண்ட் கச்சா எண்ணெய் விலையும் நான்காவது நாளாக, தொடர்ந்து சப்ளை பற்றாக்குறையினால் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வரும் வாரத்தில் இருந்து ஒபெக் நாடுகள் சப்ளையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளன. இதனால் வரும் வாரங்களில் விலை குறையலாம் என்றாலும், கச்சா எண்ணெய் விலை உயர்வானது பணவீக்கத்திற்கு வழிவகுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சர்வதேச பங்குச் சந்தைகள் பலவும் சரிவில் காணப்படுகின்றன.
முதலீடுகள் வரத்து
கடந்த சில வாரங்களாகவே அந்நிய முதலீடுகளின் வரத்தானது, சந்தையில் அதிகரித்து வந்தது. இதனால் கடந்த சில வாரங்களாக சந்தையானது தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. ஆனால் கடந்த சில நாட்களாகவே அந்நிய முதலீடுகளின் அளவு குறையத் தொடங்கியுள்ளது. மாறாக முதலீடுகள் வெளியேறத் தொடங்கியுள்ளன. அக்டோபர் 5 நிலவரப்படி, அந்நிய நிறுவன முதலீடுகளை முதலீடுகள் 1915.08 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர். அதே நேரத்தில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் 1868.23 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். இந்திய சந்தையானது இதற்கிடையில்தான் சற்றே ஏற்றத்தில் காணப்படுகிறது.
சர்வதேச பங்கு சந்தைகள்
மேலும் கடந்த அமர்வில் அமெரிக்கா சந்தையானது சற்றே ஏற்றத்தில் முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் ஆசிய சந்தைகள் பலவும் சரிவில் தான் காணப்பட்டன. எனினும் பல காரணிகளும் இந்திய சந்தைக்கு சாதகமாக காரணிகளாக அமைந்துள்ள நிலையில், இந்திய சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளது.
இன்று சந்தைகள் தொடக்கம்
இதற்கிடையில் இன்று ஃப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சென்செக்ஸ் 137.90 புள்ளிகள் அதிகரித்து, 59,882.78 புள்ளிகளாக காணப்பட்டது. இதே தேசிய பங்கு சந்தை நிப்டி குறியீடு 38.50 புள்ளிகள் அதிகரித்து, 17,860.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதனையடுத்து சந்தையின் தொடக்கத்திலும் ஏற்றத்திலேயே காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 88.86 புள்ளிகள் அதிகரித்து, 59,833.74 புள்ளிகளாகவும், இதே நிப்டி 47.20 புள்ளிகள் அதிகரித்து, 17,869.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து 1,638 பங்குகள் ஏற்றத்திலும், 335 பங்குகள் சரிவிலும், 78 பங்குகள் மாற்றம் இல்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ் நிலவரம்
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள நிஃப்டி ஐடி, பிஎஸ்இ ஹெல்த்கேர், பிஎஸ்இ மெட்டல்ஸ், பிஎஸ்இ டெக் குறியீடுகள் சரிவில் காணப்படுகின்றன. இதனை தவிர மற்ற குறியீடுகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன. எனினும் பெரியளவில் ஏற்றம் காணமல், 1% கீழாக ஏற்றம் கண்டுள்ளது.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள ஓ.என்.ஜி.சி, யுபிஎல், பிரிட்டானியா, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, பிபிசிஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், டிவிஸ் லேப், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், ஹெச்.சி.எல் டெக், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஹெச்.டி.எஃப்.சி, எஸ்பிஐ, ஆக்ஸிஸ் வங்கி, எம் & எம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்.சி.எல் டெக், டைட்டன் நிறுவனம், டெக் மகேந்திரா, இந்தஸிந்த் வங்கி, டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சந்தையில் தற்போதைய நிலவரம்
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 79.22 புள்ளிகள் அதிகரித்து, 59,824.10 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 24.65 புள்ளிகள் அதிகரித்து, 17,846.95 புள்ளிகளாகவும் காணப்படுகிறது. இது பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியிலும் ஏற்றத்தில் காணப்படுகின்றது.
More From GoodReturns

ஒரே நாளில் ரூ14 லட்சம் கோடிக்கு மேல் லாபம்! சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்!ஏன் தெரியுமா?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

டிரம்ப் கொடுத்த ஸ்பீச்: ரத்தக்களரியான பங்குச் சந்தை? சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?



Click it and Unblock the Notifications