நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று, பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில், இந்திய சந்தைகள் இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன. குறிப்பாக சென்செக்ஸ் 61,000 புள்ளிகளுக்கு மேலாக தொடர்ந்து வர்த்தகமாகி வருகின்றது.
இது மேற்கொண்டு ஏற்றம் காணுமா? என்ற சந்தேகமும் முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்து வருகின்றது.
ஏனெனில் கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் ஏற்றத்தினை கண்டன. எனினும் இன்று ஆசிய சந்தைகள் பலவும் தொடக்கத்தில் சரிவில் காணப்பட்டன. இதற்கிடையில் தான் தற்போது இந்திய சந்தைகள் தற்போது ஏற்றம் கண்டுள்ளன. ஆக இந்த ஏற்றம் இப்படியே தொடருமா? அல்லது சரியுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
Array
நாளை இந்திய சந்தையில் F&O எக்ஸ்பெய்ரி என்பதால், நீண்டகால முதலீட்டாளர்கள் புராபிட் புக்கிங் செய்யலாம். அல்லது தங்களது ஆர்டர்களை ரோல் ஓவர் செய்யலாம். இதனால் பங்கு சந்தையில் அதிக ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம் என்ற சந்தேகம் நிலவி வருகின்றது.
முதலீடுகள் வரத்து
கடந்த சில வாரங்களாகவே அந்நிய முதலீடுகளின் வரத்தானது, சந்தையில் ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் நிலையில் அக்டோபர் 25 நிலவரப்படி, அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் 2,368.66 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர். அதே நேரத்தில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் 1,385.41 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். இதற்கிடையில்தான் சந்தையானது இன்று சற்றே ஏற்றத்தில் காணப்படுகிறது.
இன்று சந்தைகள் தொடக்கம்
இதற்கிடையில் இன்று ஃப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சென்செக்ஸ் 398.16 புள்ளிகள் அதிகரித்து, 61,748.42 புள்ளிகளாக காணப்பட்டது. இதே தேசிய பங்கு சந்தை நிப்டி குறியீடு 40.10 புள்ளிகள் அதிகரித்து, 18,308.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதனையடுத்து சந்தையின் தொடக்கத்திலும் ஏற்றத்திலேயே காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 168.05 புள்ளிகள் அதிகரித்து, 61,518.31 புள்ளிகளாகவும், இதே நிப்டி 37.90 புள்ளிகள் அதிகரித்து, 18,306.300 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து 1,339 பங்குகள் ஏற்றத்திலும், 400 பங்குகள் சரிவிலும், 76 பங்குகள் மாற்றம் இல்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ் நிலவரம்
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பேங்க் நிஃப்டி, பிஎஸ்இ மெட்டல்ஸ் தவிர மற்ற குறியீடுகள் ஏற்றத்தில் காணப்படுகின்றன. எனினும் மற்ற குறியீடுகளும் 1% கீழாகவே ஏற்றத்தில் காணப்படுகின்றன. இவைகளும் பெரியளவில் ஏற்றம் காணவில்லை.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள ஏசியன் பெயிண்ட்ஸ், டிவிஸ் லேப்ஸ், யுபிஎல், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், எஸ்பிஐ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், டாடா மோட்டார்ஸ், டெக் மகேந்திரா, பவர் கிரிட் கார்ப் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஏசியன் பெயிண்ட்ஸ், எஸ்பிஐ, ஐ சி ஐ சி ஐ வங்கி, சன் பார்மா, நெஸ்டில் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், டெக் மகேந்திரா, பவர் கிரிட் கார்ப், டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சந்தையில் தற்போதைய நிலவரம்
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 71.46 புள்ளிகள் அதிகரித்து, 61,421.72 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 22.65 புள்ளிகள் அதிகரித்து, 18,290.80 புள்ளிகளாகவும் காணப்படுகிறது. இது பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியிலும் ஏற்றத்தில் காணப்படுகின்றது.
டைட்டன் மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் கவனிக்க வேண்டிய பங்குகளாக உள்ளன.
More From GoodReturns

சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

ஒரே நாளில் ரூ14 லட்சம் கோடிக்கு மேல் லாபம்! சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்!ஏன் தெரியுமா?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

டிரம்ப் கொடுத்த ஸ்பீச்: ரத்தக்களரியான பங்குச் சந்தை? சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!



Click it and Unblock the Notifications