நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில், இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன.
கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் சற்று சரிவில் முடிவடைந்திருந்தாலும், ஆசிய சந்தைகள் பலவும் ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றன. இதன் எதிரொலி இந்திய சந்தையிலும் காணப்படுகின்றது.
இன்று ஆட்டோமொபைல் துறை பங்குகள், வங்கி பங்குகள், மெட்டல் பங்குகள் கவனிக்க வேண்டிய பங்குகளாக உள்ளன.
முதலீடுகள் வெளியேற்றம்
நவம்பர் 30 நிலவரப்படி, கடந்த அமர்வில் 5,445.25 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை அன்னிய முதலீட்டாளார்கள் விற்று வெளியேறியுள்ளனர். இதே உள்நாட்டு முதலீட்டாளார்கள் 5,350.23 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கினை வாங்கியுள்ளனர். இது சந்தையில் பெரியளவிலான சரிவினைத் தடுத்துள்ளது எனலாம்.
இந்திய சந்தைகள் தொடக்கம்
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சென்செக்ஸ் 196.69 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 57,261.56 புள்ளிகளாகவும், நிஃப்டி 50.90 புள்ளிகள் அதிகரித்து, 17,034.10 புள்ளிகளாகவும் ஏற்றம் கண்டு காணப்படுகிறது. இதனையடுத்து சென்செக்ஸ் 633.10 புள்ளிகள் அதிகரித்து, 57,697.97 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 198.10 புள்ளிகள் அதிகரித்து, 17,181.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1,361 பங்குகள் ஏற்றத்திலும், 410 பங்குகள் சரிவிலும், 74 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ் நிலவரம்
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பிஎஸ்இ ஹெல்த்கேர் சரிவில் காணப்படுகின்றது. மற்ற குறியீடுகள் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி ஐடி, நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ டெக், பிஎஸ்இ மெட்டல்ஸ் உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாக ஏற்றம் கண்டு காணப்படுகின்றது. மற்ற குறீயீடுகள் 1% கீழாக ஏற்றத்தில் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள இந்தஸிந்த் வங்கி, ஈச்சர் மோட்டார்ஸ், ஹெச்.டி.எஃப்.சி, ஹிண்டால்கோ, ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஓ.என்.ஜி.சி, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், ஐஓசி, டிவிஸ் லேப், சன் பார்மா மாருதி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள இந்தஸிந்த் வங்கி, ஹெச்.டி.எஃப்.சி, டெக் மகேந்திரா, மாருதி சுசுகி, ஹெச்.சி.எல் டெக் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், என்.டி.பி.சி, சன் பார்மா., அல்ட்ராடெக் சிமெண்ட், கோடக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சந்தையில் தற்போதைய நிலவரம்
தற்போது சென்செக்ஸ் 541.67 புள்ளிகள் அதிகரித்து, 57,607.54 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 162.60 புள்ளிகள் அதிகரித்து, 17,145.80 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி விகிதம் 8.4% வளர்ச்சி கண்டுள்ள நிலையில், இது பொருளாதாரம் மீண்டு வந்து கொண்டுள்ளதையே காட்டுகின்றது. எனினும் தற்போது ஓமிக்ரானின் அச்சமும் சந்தையில் நிலவி வருகின்றது.
More From GoodReturns

சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!

ஒரே நாளில் ரூ14 லட்சம் கோடிக்கு மேல் லாபம்! சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்!ஏன் தெரியுமா?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

டிரம்ப் கொடுத்த ஸ்பீச்: ரத்தக்களரியான பங்குச் சந்தை? சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!



Click it and Unblock the Notifications