கடைசி வர்த்தக நாளில் தூள் கிளப்பும் சென்செக்ஸ், நிஃப்டி.. கவனிக்க வேண்டிய ரிலையன்ஸ்..!

இந்திய பங்கு சந்தைகள் இந்த வருடத்தின் கடைசி வர்த்தக நாளாக வர்த்தக நாளான இன்று தூள் கிளப்பி வருகின்றன.

கடந்த அமர்வில் எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி என்பதால், முதலீட்டளார்கள் தங்களது லாபத்தினை புக் செய்த நிலையில் இந்திய சந்தையானது பெரியளவில் ஏற்ற இறக்கத்தினை கண்டு, முடிவில் சற்று சரிவில் முடிவடைந்தது.

இதற்கிடையில் கடந்த அமர்வில் அமெரிக்க சந்தையானது சற்று குறைந்து சரிவிலேயே முடிவடைந்தன. இது அமெரிக்காவில் வேலையின்மை நலன் குறித்தான தரவானது சற்று சரிவினைக் கண்டுள்ளது. இது கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகள் என்பதால் இருக்கலாம் என கூறப்படுகின்றது.

ஓமிக்ரான் பரவல்

ஓமிக்ரான் பரவல்

எனினும் ஓமிக்ரான் பரவல் என்பது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இது சந்தையில் மீண்டும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அடுத்த ஆண்டில் சர்வதேச சந்தைகள் மீண்டும் ஏற்றம் காணலாம் என எதிர்பர்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்திய சந்தைகள் மீண்டும் ஏற்றம் காணலாம்.

 முதலீடுகள் வரத்து

முதலீடுகள் வரத்து

தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வெளியேறி வந்த நிலையில், டிசம்பர் 30 அன்று அன்னிய முதலீட்டாளர்கள் 986.32 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர். இதே உள்நாட்டு முதலீட்டாளார்கள் 577.74 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். இது வரவிருக்கும் நாட்களில் அன்னிய முதலீடுகள் என்பது சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடக்கம் எப்படி?

தொடக்கம் எப்படி?

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே இந்திய சந்தைகள் ஏற்றத்தில் காணப்படுகின்றது. குறிப்பாக சென்செக்ஸ் 173.90 புள்ளிகள் அதிகரித்து, 57,968.22 புள்ளிகளாகவும், நிஃப்டி 1.80 புள்ளிகள் அதிகரித்து, 17,205.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

இதனையடுத்து தொடக்கத்திலும் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 259.83 புள்ளிகள் அதிகரித்து, 58,054.15 புள்ளிகளாகவும், நிஃப்டி 77.50 புள்ளிகள் அதிகரித்து, 17,281.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1444 பங்குகள் ஏற்றத்திலும், 358 பங்குகள் சரிவிலும், 71 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

 

இன்டெக்ஸ் நிலவரம்

இன்டெக்ஸ் நிலவரம்

சென்செக்ஸ் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீட்டில் உள்ள நிஃப்டி ஐடி மட்டும் சரிவில் காணப்படுகின்றது. குறிப்பாக பேங்க் நிஃப்டி, நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள் குட்ஸ், பிஎஸ்இ மெட்டல்ஸ் உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாக அதிகரித்து காணப்படுகின்றது. மற்றவை 1% கீழாக ஏற்றத்தில் மாற்றமின்றி காணப்படுகின்றது.

நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்

நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்

நிஃப்டி குறியீட்டில் உள்ள ஹிண்டால் கோ, டைட்டன் நிறுவனம், ஆக்ஸிஸ் வங்கி, கோடக் மஹிந்திரா, கிரசிம் உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினராகவும், இதே என் டி பி சி, டெக் மகேந்திரா, விப்ரோ, இன்ஃபோசிஸ், பவர் கிரிட் கார்ப் உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளது.

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டைட்டன் நிறுவனம், ஆக்ஸிஸ் வங்கி, கோடக் மஹிந்திரா,மாருதி சுசுகி, எஸ்பிஐ உள்ளிட்ட பங்குகள் மட்டுமே டாப் கெயினராகவும், இதே போல என் டி பி சி, டெக் மகேந்திரா, விப்ரோ, இன்ஃபோசிஸ், பவர் கிரிட் கார்ப் உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

தற்போதைய நிலவரம்

தற்போதைய நிலவரம்

தற்போது (10.05 மணி நிலவரப்படி) சென்செக்ஸ் 403.04 புள்ளிகள் அதிகரித்து, 58,197.36 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 127.25 புள்ளிகள் அதிகரித்து, 17,331.20 புள்ளிகளாகவும் காணப்படுகின்றது. இன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு கபவனிகக் வேண்டிய பங்குகளில் ஒன்றாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+