ஏறுமுகத்தில் பங்கு சந்தைகள்.. முதலீட்டாளர்களுக்கு ஆறுதல் கொடுத்த சென்செக்ஸ், நிஃப்டி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடப்பு வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான இன்று பல்வேறு காரணிகளுக்கு மத்தியில், இந்திய சந்தைகள் தொடர்ந்து ஏற்றத்தில் காணப்படுகின்றன.

 

கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் சந்தைகள், இன்று ஏற்றத்தில் காணப்படுவது முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் சரிவில் முடிவடைந்துள்ளது. இதன் எதிரொலியாக இன்று ஆசிய சந்தைகள் சிலவும் சரிவில் காணப்படுகின்றன.

சர்வேதேச சந்தைகள் சரிவு

சர்வேதேச சந்தைகள் சரிவு

கடந்த அமர்வில் பல்வேறு சாதகமான காரணிகளுக்கு மத்தியில் அமெரிக்க சந்தையானது சரிவில் காணப்பட்டது. குறிப்பாக டவ் ஜோன்ஸ் 461.68 புள்ளிகள் குறைந்து 34,022.04 புள்ளிகளாகவும், இதே எஸ் & பி 500 53.96 புள்ளிகள் சரிந்து 4,513.04 புள்ளிகளாகவும் காணப்பட்டது, இதோடு நாஸ்டாக் காம்போசைட் குறியூடும் சரிவில் காணப்பட்டது. இதனால் ஆசிய சந்தைகள் சிலவும் சரிவில் காணப்படுகின்றது. பரவி வரும் ஓமிக்ரான் பற்றிய அச்சமும் சந்தையில் காணப்படுகின்றது.

முதலீடுகள் வெளியேற்றம்

முதலீடுகள் வெளியேற்றம்

பல சர்வதேச காரணிகளுக்கு மத்தியில், இந்திய சந்தையில் அன்னிய முதலீடுகள் வரத்து என்பது தொடர்ந்து வெளியேறி வருகின்றது. டிசம்பர் 1, நிலவரப்படி, அன்னிய முதலீட்டாளர்கள் 2,765.84 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர். இதே உள்நாட்டு முதலீட்டாளர்கள் 3,467.02 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். இது சந்தையில் ஏற்படும் அதிக சரிவினை தடுத்துள்ளது.

இந்திய சந்தைகள் தொடக்கம்
 

இந்திய சந்தைகள் தொடக்கம்

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. சென்செக்ஸ் 226.20 புள்ளிகள் அதிகரித்து, 57,910.99 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 28.60 புள்ளிகள் அதிகரித்து, 17,138.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதனையடுத்து தொடக்கத்தில் சற்று ஏற்றத்தில் தான் தொடங்கியது. குறிப்பாக சென்செக்ஸ் 48.12 புள்ளிகள் அதிகரித்து, 57,732.91 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 16.80 புள்ளிகள் அதிகரித்து, 17,183.70 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1,056 பங்குகள் அதிகரித்தும், 563 பங்குகள் சரிவிலும், 99 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

இன்டெக்ஸ் நிலவரம்

இன்டெக்ஸ் நிலவரம்

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பேங்க் நிஃப்டி, பிஎஸ்இ கேப்பிட்டல் குட்ஸ், பிஎஸ்இ மெட்டல்ஸ் உள்ளிட்ட குறியீடுகள் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. எனினும் பிஎஸ்இ ஆயில் & கேஸ், பிஎஸ்இ ஹெல்த்கேர், பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள் குட்ஸ் உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாக ஏற்றத்தில் காணப்படுகின்றன. நிஃப்டி

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீட்டில் உள்ள பவர் கிரிட் கார்ப், ஐஓசி, எம்&எம், பிபிசிஎல், டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஆக்ஸிஸ் வங்கி, ஹிண்டால்கோ, லார்சன், டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பவர் கிரிட் கார்ப், டைட்டன் நிறுவனம், எம்&எம், ஹெச்.டி.எஃப்.சி, சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஆக்ஸிஸ் வங்கி, லார்சன், ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, இந்தஸிந்த் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சந்தையில் தற்போதைய நிலவரம்

சந்தையில் தற்போதைய நிலவரம்

இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 324.57 புள்ளிகள் அதிகரித்து, 58,030.90 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 107.85 புள்ளிகள் அதிகரித்து, 17,274.75 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Opening bell: sensex, nifty trade higher, power stocks, JMC in focus

Opening bell: sensex, nifty trade higher, power stocks, JMC in focus/
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X