இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளாக இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. கடந்த வாரத்தில் பிற்பாதியில் தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த நிலையில், இந்த வாரத்தில் ஏற்ற இறக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் சற்று ஏற்றத்தில் முடிவடைந்ததையடுத்து, ஆசிய சந்தைகள் பலவும் ஏற்றத்தில் தான் காணப்படுகின்றன. இதனையடுத்து இந்திய சந்தையும் ஏற்றத்தில் காணப்படுகின்றது.
இதற்கிடையில் தான் இந்திய சந்தையானது இன்று தொடக்கம் முதல் கொண்டு ஏற்றத்திலேயே காணப்படுகின்றது. இது குறைந்த விலையில் வாங்க நல்ல இடமாகவும் பார்க்கப்படுகிறது.
முதலீடுகள் வெளியேற்றம்
எப்படியிருப்பினும் தொடர்ந்து அன்னிய முதலீடுகள் என்பது வெளியேறிய வண்ணமே உள்ளது. குறிப்பாக டிசம்பர் 27 நிலவரப்படி, அன்னிய முதலீடுகள் வெளியேற்றம், 1,038.25 கோடி ரூபாயாக வெளியேற்றம் கண்டுள்ளது. இதே உள்நாட்டு முதலீட்டாளார்கள் 955.79 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். ஆக இதுவும் சந்தைக்கு சாதகமான ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகின்றது.
தொடக்கம் எப்படி?
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சந்தைகள் வலுவான ஏற்றத்தில் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 333 புள்ளிகள் அதிகரித்து, 57,753.24 புள்ளிகளாகவும், நிஃப்டி 34.70 புள்ளிகள் அதிகரித்து, 17,121 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதனையடுத்து தொடக்கத்திலும் சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 329.81 புள்ளிகள் அதிகரித்து, 56,673.51 புள்ளிகளாகவும், நிஃப்டி 95.50 புள்ளிகள் அதிகரித்து, 17,181.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1598 பங்குகள் ஏற்றத்திலும், 286 பங்குகள் சரிவிலும், 68 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்படுகின்றது.
இன்டெக்ஸ் நிலவரம்
சென்செக்ஸ் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் சற்று ஏற்றத்திலேயே காணப்படுகின்றன. எனினும் அனைத்து குறியீடுகளும் 1% கீழாக ஏற்றத்தில் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்
நிஃப்டி குறியீட்டில் உள்ள ஓ.என்.ஜி.சி, அதானி போர்ட்ஸ், ஈச்சர் மோட்டார்ஸ், பஜாஜ் பைனான்ஸ், கோல் இந்தியா உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினராகவும், இதே சிப்லா, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், பஜாஜ் ஆட்டோ, ஹெச்.டி.எஃப்.சி லைஃப் உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஏசியன் பெயிண்ட்ஸ், டெக் மகேந்திரா, ஹெச் சி எல் டெக், இன்ஃபோசிஸ், பவர் கிரிட் கார்ப் உள்ளிட்ட பங்குகள் மட்டுமே டாப் கெயினராகவும், இதே டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ் பங்கு மட்டும் டாப் லூசராக உள்ளது.
தற்போதைய நிலவரம்
தற்போது (9.33 மணி நிலவரப்படி) சென்செக்ஸ் 372.29 புள்ளிகள் அதிகரித்து, 57,792.53 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 111.70 புள்அதிகரித்து, 17,197.95 புள்ளிகளாகவும் காணப்படுகின்றது. ஆர்பிஎல் வங்கி, சுப்ரியா லைஃப்சயின்ஸ் உள்ளிட்ட பங்குகள் கவனிக்கப்பட வேண்டிய பங்குகளாக உள்ளன.


Click it and Unblock the Notifications