வீழ்ச்சியில் பங்கு சந்தை.. சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் சரிவு.. என்ன காரணம்!

நடப்பு வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான இன்றும், பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் இந்திய சந்தைகள் சரிவில் காணப்படுகின்றன.

கடந்த சில அமர்வுகளாக சற்று ஏற்றத்தில் காணப்பட்ட பங்கு சந்தைகள் இன்று மீண்டும் சரிவில் காணப்படுகின்றது. இது இன்னும் ஏற்ற இறக்கத்தினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று இந்திய சந்தையில் எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி என்பதால், முதலீட்டாளர்கள் தங்களது லாபத்தினை புக் செய்யலாம், அல்லது அடுத்த கான்ட்ராக்டில் ஆர்டர்களை ரோல் ஓவர் செய்யலாம். ஆக இது சந்தையில் அதிக ஏற்ற இறக்கத்திற்கு வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சரிவில் பங்கு சந்தைகள்

சரிவில் பங்கு சந்தைகள்

இதற்கிடையில் அமெரிக்க சந்தைகள் கடந்த அமர்வில் சரிவில் முடிவடைந்ததையடுத்து, ஆசிய சந்தைகள் பலவும் சரிவில் காணப்படுகின்றன. இதற்கிடையில் தான் இந்திய சந்தைகளும் சரிவில் காணப்படுகின்றன. இது இன்னும் சரியலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

ஆரம்பமே சரிவு தான்

ஆரம்பமே சரிவு தான்

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சற்று ஏற்ற இறக்கத்தில் தான் காணப்பட்டது. சென்செக்ஸ் 9.13 புள்ளிகள் அதிகரித்து, 61,152.46 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 93.40 புள்ளிகள் குறைந்து, 18,117.60 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்திலும் சற்று சரிவில் தான் தொடங்கியது. குறிப்பாக சென்செக்ஸ் 178.90 புள்ளிகள் குறைந்து, 60,964.43 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 61.10 புள்ளிகள் குறைந்து, 18,149.90 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1026 பங்குகள் ஏற்றத்திலும், 727 பங்குகள் சரிவிலும், 86 மாற்றமில்லாமலும் காணப்படுகின்றது.

இன்டெக்ஸ் நிலவரம்

இன்டெக்ஸ் நிலவரம்

இதற்கிடையில் பல குறியீடுகளும் சரிவிலேயே காணப்படுகின்றன. குறிப்பாக பிஎஸ்இ மெட்டல்ஸ் 2% மேலாகவும், பேங்க் நிஃப்டி, பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள் குட்ஸ், பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாக சரிவிலும், மற்ற குறையீடுகள் 1% கீழாக சரிவிலும் காணப்படுகின்றன. இதில் பிஎஸ்இ கேப்பிட்டல் குட்ஸ் மாற்றமின்றி காணப்படுகின்றது.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீட்டில் உள்ள இந்தஸ்இந்த் வங்கி, லார்சன், எம் & எம், அல்ட்ராடெக் சிமெண்ட், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே அதானி போர்ட்ஸ், ஓ என் ஜி சி, ஹிண்டால்கோ, ஐடிசி, கோல் இந்தியா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள இந்தஸ்இந்த் வங்கி, லார்சன், அல்ட்ராடெக் சிமெண்ட், மாருதி சுசூகி, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஐடிசி, டைட்டன், ஐ சி ஐ சி ஐ வங்கி, எஸ்பிஐ, டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சந்தையில் தற்போதைய நிலவரம்

சந்தையில் தற்போதைய நிலவரம்

இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 344.85 புள்ளிகள் குறைந்து, 60,798.48 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 114.95 புள்ளிகள் குறைந்து, 18,096 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

சந்தையில் கொரோனா மூன்றாம் அலையின் அச்சத்தின் மத்தியில், பணவீக்கமும் அதிகரித்து வருகின்றது. இதற்கிடையில் சந்தையில் ஏற்றம் இறக்கம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+