நடப்பு வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான இன்று, பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில், இந்திய சந்தைகள் சரிவில் காணப்படுகின்றன.
இது தொடக்கத்தில் சற்று ஏற்றத்தில் காணப்பட்டது. எனினும் தற்போது சரிவில் காணப்படுகின்றது. என்ன காரணம்? ஏன் இந்த ஏற்ற இறக்கம்?
சர்வதேச சந்தைகளின் நிலவரம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
சர்வதேச பங்கு சந்தைகள்
அமெரிக்காவில் எரிபொருள் தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், எரிபொருட்கள் விலையானது அதிகரித்து வருகினாது. இதன் காரணமாக பணவீக்கம் இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அமெரிக்க சந்தைகள் சரிவில் முடிவடைந்தன. இதன் எதிரொலியாக பல ஆசிய சந்தைகளும் சரிவில் காணப்படுகின்றன. இதே போல இங்கிலாந்தின் பணவீக்க விகிதமானது 10 வருட உச்சத்தில் காணப்படுகின்றது.
முதலீடுகள் வெளியேற்றம்
கடந்த சில தினங்களாகவே மீண்டும் அந்நிய முதலீடுகளின் வரத்தானது வெளியேறத் தொடங்கியுள்ளது. நவம்பர் 17 நிலவரப்படி, அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் 344.35 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர். அதே நேரத்தில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் 61.14 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். இதற்கிடையில்தான் இந்திய சந்தையானது ஏற்ற இறக்கத்தில் காணப்படுகிறது.
இன்று சந்தைகள் தொடக்கம்
இன்று ஃப்ரீ ஓபனிங் சந்தையில் சென்செக்ஸ் 146.92 புள்ளிகள் அதிகரித்து, 60,155.25 புள்ளிகளாக காணப்பட்டது. இதே தேசிய பங்கு சந்தை நிப்டி குறியீடு 18.60 புள்ளிகள் குறைந்து, 17,880.10 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதனையடுத்து சந்தையின் தொடக்கத்திலும் ஏற்றத்திலேயே காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 82.59 புள்ளிகள் அதிகரித்து, 60,090.92 புள்ளிகளாகவும், இதே நிப்டி 26.60 புள்ளிகள் அதிகரித்து, 17,925.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து 1,246 பங்குகள் ஏற்றத்திலும், 505 பங்குகள் சரிவிலும், 91 பங்குகள் மாற்றம் இல்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ் நிலவரம்
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள நிஃப்டி 50, பிஎஸ்இ சென்செக்ஸ், நிஃப்டி ஐடி, பிஎஸ்இ ஸ்மால் கேப், பிஎஸ்இ மிட் கேப், பிஎஸ்இ கேப்பிட்டல் குட்ஸ், நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ ஹெல்த்கேர், பிஎஸ்இ மெட்டல்ஸ், பிஎஸ்இ ஆயில் & கேஸ், பிஎஸ்இ டெக், நிஃப்டி பிஎஸ்இ உள்ளிட்ட குறியீடுகள் சரிவில் காணப்படுகின்றன. மற்ற குறியீடுகள் மாற்றமில்லாமல் காணப்படுகின்றது.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள ஹிண்டால்கோ, எஸ்பிஐ, பஜாஜ் பின்செர்வ், கிரசிம், ஹெச்.டி.எஃப்.சி வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டாடா மோட்டார்ஸ், டெக் மகேந்திரா, எம் & எம், ஓ.என்.ஜி.சி, ஈச்சர் மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பஜாஜ் பைனான்ஸ், எஸ்பிஐ, ஐடிசி, பவர் கிரிட் கார்ப், என்.டி.பி.சி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டெக் மகேந்திரா, எம்&எம், ஹெச்.சி.எல் டெக், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சந்தையில் தற்போதைய நிலவரம்
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 66 புள்ளிகள் குறைந்து, 59,947.39 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 26.30 புள்ளிகள் குறைந்து, 17,872.35 புள்ளிகளாகவும் காணப்படுகிறது. இது பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றது.
More From GoodReturns

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

டிரம்ப் கொடுத்த ஸ்பீச்: ரத்தக்களரியான பங்குச் சந்தை? சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி?

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?



Click it and Unblock the Notifications