நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று, பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில், இந்திய சந்தைகள் சரிவில் காணப்படுகின்றன.
கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் சரிவில் முடிவடைந்ததையடுத்து, அமெரிக்க டாலரின் மதிப்பும் சரிவில் காணப்படுகின்றது. இதற்கிடையில் இன்று ஆசிய சந்தைகள் பலவும் சரிவில் காணப்படுகின்றது.
இதன் தொடர்ச்சியாக இந்திய பங்கு சந்தையும் சரிவில் காணப்படுகின்றது.
முதலீடுகள் வெளியேற்றம்
கடந்த சில வாரங்களாகவே அந்நிய முதலீடுகளின் வரத்தானது, சந்தையில் அதிகரித்து வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாகவே அந்நிய முதலீடுகளின் அளவு குறையத் தொடங்கியுள்ளது. தொடர்ந்து முதலீடுகள் வெளியேறத் தொடங்கியுள்ளன. நவம்பர் 9 நிலவரப்படி, அந்நிய நிறுவன முதலீடுகளை 2,445.25 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர். அதே நேரத்தில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் 1,417.63 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். இந்திய சந்தையானது இதற்கிடையில்தான் சற்றே ஏற்றத்தில் காணப்படுகிறது.
இன்று சந்தைகள் தொடக்கம்
இன்று ஃப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சென்செக்ஸ் 22.25 புள்ளிகள் குறைந்து, 60,455.70 புள்ளிகளாக காணப்பட்டது. இதே தேசிய பங்கு சந்தை நிப்டி குறியீடு 16.10 புள்ளிகள் குறைந்து, 18,028.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதனையடுத்து சந்தையின் தொடக்கத்திலும் ஏற்றத்திலேயே காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 325.58 புள்ளிகள் குறைந்து, 60,107.87 புள்ளிகளாகவும், இதே நிப்டி 93.70 புள்ளிகள் குறைந்து, 17,950.60 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து 151 பங்குகள் ஏற்றத்திலும், 266 பங்குகள் சரிவிலும், 37 பங்குகள் மாற்றம் இல்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ் நிலவரம்
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பிஎஸ்இ ஹெல்த்கேர், பிஎஸ்இ ஆயில் & கேஸ் தவிர, மற்ற குறியீடுகள் அனைத்தும் சரிவிலேயே காணப்படுகின்றது. இதில் பிஎஸ்இ மெட்டல்ஸ் 1% மேலாக சரிவிலும், மற்ற குறியீடுகள் சரிவிலும் காணப்படுகின்றது.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள யுபிஎல், எம் & எம், பிரிட்டானியா, ஈச்சர் மோட்டார்ஸ், சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல், ஹிண்டால் கோ, கோல் இந்தியா, இண்டஸ் இண்ட் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள எம் & எம், டெக் மகேந்திரா, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், சன் பார்மா, பார்தி ஏர்டெல், உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டாடா ஸ்டீல், இந்தஸ் இந்த் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பவர் கிரிட் கார்ப், ஹெச்.டி.எஃப்.சி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சந்தையில் தற்போதைய நிலவரம்
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 410.85 புள்ளிகள் குறைந்து, 60,022.60 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 114.25 புள்ளிகள் குறைந்து, 17,930 புள்ளிகளாகவும் காணப்படுகிறது. இது பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் தொடர்ந்து சரிவில் காணப்படுகின்றது.


Click it and Unblock the Notifications