நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று, பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில், இந்திய சந்தைகள் சரிவில் காணப்படுகின்றன.
கடந்த அமர்வில் வீடு விற்பனை குறித்தான டேட்டா வெளியான நிலையில், அது அமெரிக்க சந்தைக்கு பாதுகாப்பாக அமைந்தது. இதற்கிடையில் தான் அமெரிக்க சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்திருந்தன.
ஆனால் ஆசிய சந்தைகள் பலவும் இன்று சரிவில் காணப்படுகின்றது.
ஜப்பானின் மெதுவான வளர்ச்சி
இது ஜப்பானில் தற்போது ஏற்றுமதி விகிதமானது குறைவாக இருந்து வருவதை சுட்டி காட்டுகின்றது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அனுப்பும் கார் ஏற்றுமதியானது சரிவினைக் கண்டுள்ளது. இது நிலவி வரும் சிப் பற்றாக்குறைக்கு மத்தியில் குறைந்துள்ளது. இது மெதுவான பொருளாதார வளர்ச்சி வழிவகுக்கலாம் என முதலீட்டாளர்கள் மத்தியில் கருத்துகள் நிலவி வருகின்றது.
பணவீக்கம் அதிகரிக்கலாம்
இதே அமெரிக்காவின் தற்போது மிகப்பெரிய கவலையாக இருப்பது பெட்ரோல் விலை விகிதம் தான். ஏற்கனவே ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. இது மேற்கொண்டு பணவீக்கத்தினை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஒபெக் நாடுகளை உற்பத்தியினை அதிகரிக்க அமெரிக்கா கோரிக்கை விடுத்து வருகின்றது.
முதலீடுகள் வெளியேற்றம்
கடந்த சில தினங்களாகவே மீண்டும் அந்நிய முதலீடுகளின் வரத்தானது, சந்தையில் அதிகரித்து வந்தது. ஆனால் நவம்பர் 16 நிலவரப்படி, அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் 560.67 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர். அதே நேரத்தில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் 577.34 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். இந்திய சந்தையானது இதற்கிடையில்தான் ஏற்ற இறக்கத்தில் காணப்படுகிறது.
இன்று சந்தைகள் தொடக்கம்
இன்று ஃப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சென்செக்ஸ் 226.08 புள்ளிகள் குறைந்து, 60,096.29 புள்ளிகளாக காணப்பட்டது. இதே தேசிய பங்கு சந்தை நிப்டி குறியீடு 65.60 புள்ளிகள் குறைந்து, 17,933.60 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதனையடுத்து சந்தையின் தொடக்கத்திலும் ஏற்றத்திலேயே காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 242.60 புள்ளிகள் குறைந்து, 60,079.77 புள்ளிகளாகவும், இதே நிப்டி 71.90 புள்ளிகள் குறைந்து, 17,927.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து 831 பங்குகள் ஏற்றத்திலும், 632 பங்குகள் சரிவிலும், 120 பங்குகள் மாற்றம் இல்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ் நிலவரம்
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள நிஃப்டி 50, பிஎஸ்இ சென்செக்ஸ், பேங்க் நிஃப்டி, நிஃப்டி ஐடி, பிஎஸ்இ மெட்டல்ஸ், பிஎஸ்இ ஆயில் & கேஸ், பிஎஸ்இ டெக் உள்ளிட்ட குறியீடுகள் சரிவில் காணப்படுகின்றன. மற்ற குறியீடுகள் அனைத்தும் மாற்றமில்லாமல் காணப்படுகின்றது.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள டாடா மோட்டார்ஸ், என்.டி.பி.சி, எஸ்பிஐ, எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே சிப்லா, ஆக்ஸிஸ் வங்கி, அதானி போர்ட்ஸ், ரிலையன்ஸ், யுபிஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள என்.டி.பி.சி, எஸ்பிஐ, ஏசியன் பெயிண்ட்ஸ், பவர் கிரிட் கார்ப், மாருதி சுசூகி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஆக்ஸிஸ் வங்கி, டிசிஎஸ், ஹெச்.டி.எஃப்.சி, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், ரிலையன்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சந்தையில் தற்போதைய நிலவரம்
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 136.42 புள்ளிகள் குறைந்து, 60,185.95 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 40.65 புள்ளிகள் குறைந்து, 17,958.55 புள்ளிகளாகவும் காணப்படுகிறது. இது பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் தொடர்ந்து சரிவில் காணப்படுகின்றது.
More From GoodReturns

சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!

ஒரே நாளில் ரூ14 லட்சம் கோடிக்கு மேல் லாபம்! சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்!ஏன் தெரியுமா?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

டிரம்ப் கொடுத்த ஸ்பீச்: ரத்தக்களரியான பங்குச் சந்தை? சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!



Click it and Unblock the Notifications