கடந்த அமர்வில் இந்திய சந்தைகள் சரிவினைக் கண்டிருந்த நிலையில் , தொடர்ந்து இன்றும் சரிவினைக் கண்டு வருகின்றது.
இது தொடர்ந்து இன்னும் வீழ்ச்சி காணும் விதமாகவே காணப்படுகின்றது. கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் சரிவினைக் கண்டிருந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் ஆசிய சந்தைகள் பலவும் சரிவில் காணப்படுகின்றன.
இதற்கிடையில் தான் இன்று தொடக்கத்தில் இந்திய சந்தைகள் சரிவில் தொடங்கியது. தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், இது சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓமிக்ரான் அச்சம்
ஓமிக்ரான் அச்சம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இது மேலும் வரும் அமர்வுகளில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் விரைவில் அமெரிக்க பெடரல் வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்ற நிலையும் இருந்து வருகின்றது.
முதலீடுகள் வெளியேற்றம்
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வெளியேறி வருகின்றன. குறிப்பாக டிசம்பர் 14, நிலவரப்படி, 763.18 கோடி ரூபாய் அன்னிய முதலீடுகள் வெளியேறியுள்ளது. இதே உள்நாட்டு முதலீட்டாளார்கள் 425.43 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.
சந்தையில் தொடக்கம்
குறிப்பாக இன்று காலை ப்ரீ ஓபனிங்லேயே சென்செக்ஸ் 222.84 புள்ளிகள் குறைந்து, 57,894.25 ,புள்ளிகளாகவும், நிஃப்டி 86.90 புள்ளிகள் குறைந்து, 17,238 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதற்கிடையில் தொடக்கத்தில் சென்செக்ஸ் 54.52 புள்ளிகள் அதிகரித்து, 58,171.61 புள்ளிகளாகவும், நிஃப்டி 9.60 புள்ளிகள் அதிகரித்து, 17,334 புள்ளிகளாகவும் காணப்பட்டது.இதையடுத்து 1461 பங்குகள் ஏற்றத்திலும், 524 பங்குகள் சரிவிலும், 90 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
நிஃப்டி குறியீடு
சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள பல குறியீடுகளும் சரிவில் காணப்படுகின்றது. குறிப்பாக நிஃப்டி ஐடி, பிஎஸ்இ டெக் உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாக சரிவில் காணப்படுகின்றது.
இதற்கிடையில் நிஃப்டி குறியீட்டில் உள்ள என்டிபிசி, கோடக் மகேந்திரா, ஆக்ஸிஸ் வங்கி, லார்சன், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பஜாஜ் பைனான்ஸ், டிவிஸ் லேப், பஜாஜ் பின்செர்வ், அதானி போர்ட்ஸ், டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகாள் டாப் லூசர்களாகவும் உள்ளன,
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள என்டிபிசி, கோடக் மகேந்திரா, ஆக்ஸிஸ் வங்கி, எம் &எம், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட குறியீடுகள் ஏற்றத்திலும், பஜாஜ் பைனான்ஸ், டிவிஸ் லேப், பஜாஜ் பின்செர்வ், இன்போசிஸ், அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன
தற்போதைய நிலவரம் என்ன?
தற்போது 11.25 நிலவரப்படி, சென்செக்ஸ் 294.98 புள்ளிகள் குறைந்து, 57,822.31 புள்ளிகளாகவும், நிஃப்டி 87.25 புள்ளிகள் குறைந்து, 17,237 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
More From GoodReturns

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?



Click it and Unblock the Notifications