முதல் நாளே ஏமாற்றம் தான்.. சென்செக்ஸ், நிஃப்டி சரிவு.. ஆர்பிஎல் வங்கி 15% சரிவு..!

இந்திய பங்கு சந்தையானது கடந்த வாரத்தில் பிற்பாதியில் தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த நிலையில், இந்த வாரத்தில் ஏற்ற இறக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை ஆதலால் சர்வதேச சந்தைகள் விடுமுறையாகும். எனினும் அமெரிக்க பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் செல்வதை சுட்டிக் காட்டும் விதமாக, அமெரிக்காவின் சில்லறை விற்பனை குறித்தான தரவானது 8.5% அதிகரித்துள்ளது. இது பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டுள்ளதையே காட்டுகின்றது.

எனினும் ஆசிய சந்தைகள் பலவும் பலவீனமாக காணப்படுகின்றது. இது ஓமிக்ரான் பரவி வரும் நிலையில், பொருளாதாரம் என்னவாகுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

முதலீடுகள் வரத்து

முதலீடுகள் வரத்து

தொடர்ந்து அன்னிய முதலீடுகள் என்பது வெளியேறியே வந்தாலும, முந்தைய அமர்வுகளை காட்டிலும் சற்றே இது குறைந்துள்ளது எனலாம். ஆக இதுவும் சந்தைக்கு சாதகமான ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகின்றது. டிசம்பர் 24 நிலவரப்படி, அன்னிய முதலீடுகள் வெளியேற்றம், 715 கோடி ரூபாயாக வெளியேற்றம் கண்டுள்ளது. இதே உள்நாட்டு முதலீட்டாளார்கள் 43.24 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். ஆகவும் சந்தைக்கு சாதகமான ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகின்றது.

தொடக்கம் எப்படி?

தொடக்கம் எப்படி?

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சந்தைகள் வலுவான ஏற்றத்தில் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 293.08 புள்ளிகள் குறைந்து, 56,831.23 புள்ளிகளாகவும், நிஃப்டி 154 புள்ளிகள் அதிகரித்து, 16,849.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

இதனையடுத்து தொடக்கத்திலும் சற்று சரிவில் தான் காணப்படுகின்றது. குறிப்பாக சென்செக்ஸ் 450.80 புள்ளிகள் குறைந்து, 56,673.51 புள்ளிகளாகவும், நிஃப்டி 130.60 புள்ளிகள் அதிகரித்து, 16,873.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1018 பங்குகள் ஏற்றத்திலும், 1056 பங்குகள் சரிவிலும், 99 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்படுகின்றது.

இன்டெக்ஸ் நிலவரம்

இன்டெக்ஸ் நிலவரம்

சென்செக்ஸ் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகளும் சரிவில் காணப்படுகின்றன. குறிப்பாக பிஎஸ்இ ஸ்மால் கேப், பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், பிஎஸ்இ ஹெல்த் கேர் குறியீடுகள் மாற்றமின்றி காணப்படுகின்றன. மற்றவை சரிவிலேயே 1% கீழாக சரிவிலேயே காணப்படுகின்றது.

நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்

நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்

நிஃப்டி குறியீட்டில் உள்ள சிப்லா, எம் & எம், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், சன் பார்மா, பவர் கிரிட் கார்ப் உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினராகவும், இதே இந்தஸ்இந்த் வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், ஹிண்டால்கோ, ஈச்சர் மோட்டார்ஸ், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளது.

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பவர் கிரிட் கார்ப்,எம் & எம், டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டீஸ், சன் பார்மா, ஹெச் டி எஃப் சி உள்ளிட்ட பங்குகள் மட்டுமே டாப் கெயினராகவும், இதே இந்தஸ்இந்த் வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் பைனான்ஸ், மாருதி சுசுகி, பஜாஜ் பின்செர்வ் உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

தற்போதைய நிலவரம்

தற்போதைய நிலவரம்

தற்போது (10.15 மணி நிலவரப்படி) சென்செக்ஸ் 120.84 புள்ளிகள் குறைந்து, 57,003.47 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 40.45 புள்ளிகள் குறைந்து, 16,963.30 புள்ளிகளாகவும் காணப்படுகின்றது. ஆர்பிஎல் வங்கி 20.59% சரிவினைக் கண்டு, 136.90 ரூபாயாக காணப்படுகின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+