வார இறுதி நாளில் குழப்பமே.. சென்செக்ஸ், நிஃப்டி ஏற்ற இறக்கம்.. என்ன காரணம்..!

கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து ஏற்ற இறக்கத்தினைக் கண்டு வரும் இந்திய சந்தையானது, வார இறுதி வர்த்தக நாளான இன்று மீண்டும் ஏற்றத்தில் காணப்படுகின்றது.

கடந்த அமர்வில் அமெரிக்க சந்தையானது சற்று ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது. எனினும் ஆசிய நாடுகளில் ஓமிக்ரான் அச்சம் இருந்து வரும் நிலையில், இன்று ஆசிய சந்தைகள் பலவும் சரிவில் காணப்படுகின்றன.

முக்கிய டேட்டாக்கள்

முக்கிய டேட்டாக்கள்

எப்படியிருப்பினும் அமெரிக்காவில் வேலையின்மை நலன் குறித்தான தரவு விகிதம் அதிகரித்துள்ளது. இது சந்தையில் வேலையின்மை மீண்டும் அதிகரித்துள்ளதையே சுட்டிக் காட்டுகின்றது. இது சந்தைக்கு எதிரான ஒரு காரணியாகவும் பார்க்கப்படுகிறது. எனினும் ஜப்பானின் சேவை துறை குறித்தான குறியீடு சந்தைக்கு சாதகமாக வந்துள்ளது. இது இரண்டு ஆண்டுகளில் இல்லாதளவுக்கு உச்சம் தொட்டுள்ளது.

ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம்

ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம்

சர்வதேச சந்தையில் உள்ள சில காரணிகளுக்கு மத்தியில், இன்று வார இறுதி வர்த்தக நாள் என்பதால் சந்தையில் முதலீடுகள் வெளியேறவும் வாய்ப்புகள் உள்ளது. ஏற்கனவே கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து முதலீடுகள் வெளியேறி வந்த நிலையில், இது தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதுவும் ஒரு காரணம் என்றாலும் தொடர்ந்து வெளியேறி வரும் அன்னிய முதலீடுகள், சந்தைக்கு எதிரான சர்வதேச காரணிகள், புராபிட் புக்கிங் உள்ளிட்ட பல காரணிகளும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

எவ்வளவு வெளியேற்றம்?

எவ்வளவு வெளியேற்றம்?

டிசம்பர் 2 நிலவரப்படி, அன்னிய முதலீட்டாளர்கள் 909.71 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர். இதே உள்நாட்டு முதலீட்டாளர்கள் 1,372.65 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். இது சந்தையில் சரிவினைக் தடுத்துள்ளது எனலாம்.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சற்று சரிவில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 52.45 புள்ளிகள் குறைந்து, 58,408.84 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 36 புள்ளிகள் குறைந்து, 17,365.70 புள்ளிகளாகவும் காணப்பட்டது

இதையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 206.24 புள்ளிகள் அதிகரித்து, 58,667.35 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 59.50 புள்ளிகள் அதிகரித்து, 59.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1,409 பங்குகள் ஏற்றத்திலும், 511 பங்குகள் சரிவிலும், 74 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

 

இன்டெக்ஸ் நிலவரம்

இன்டெக்ஸ் நிலவரம்

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சரிவிலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி 50, பி.எஸ்.இ சென்செக்ஸ், நிஃப்டி ஐடி, பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி, பிஎஸ்இ ஹெல்த்கேர் உள்ளிட்ட குறியீடுகள் சரிவிலும், மற்றவை மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள லார்சன், பிபிசிஎல், அல்ட்ராடெக் சிமெண்ட், ஐஓசி, ஈச்சர் மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே நெஸ்டில், பார்தி ஏர்டெல், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், சிப்லா, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள லார்சன், அல்ட்ராடெக் சிமெண்ட், இன்ஃபோசிஸ், ஆக்ஸிஸ் வங்கி, கோடக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே நெஸ்டில், பார்தி ஏர்டெல், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், சன் பார்மா, ஹெச்.சி.எல் டெக் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

தற்போது என்ன நிலவரம்

தற்போது என்ன நிலவரம்

இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 136.67 புள்ளிகள் குறைந்து, 58,324.62 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 35.80 புள்ளிகள் குறைந்து, 17,365.85 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

ஆசிய சந்தைகள் பலவும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதன் அழுத்தம் சந்தையில் காணப்படுகின்றது. தொடக்கத்தில் ஏற்றம் கண்டிருந்த சந்தைகள் தற்போது சரிவில் காணப்படுகின்றது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+