இந்திய பங்கு சந்தைகள் இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன.
எனினும் கடந்த அமர்வில் ஏற்ற இறக்கத்திலை கண்ட நிலையில் அது புராபிட் புக்கிங் காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று சந்தையில் வாங்குவது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அமெரிக்க சந்தையானது கடந்த அமர்வில் ஏற்ற இறக்கத்தில் முடிவடைந்திருந்தாலும், இன்று தொடக்கத்தில் ஆசிய சந்தைகள் பலவும் ஏற்றத்தில் காணப்பட்டன. இதன் எதிரொலி காரணமாக இந்திய சந்தைகள் உள்ளிட்ட சிலவை ஏற்றத்தில் காணப்படுகின்றன.
முக்கிய காரணிகள்
அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் என்பது அதிகரித்து வந்தாலும், பொருளாதாரம் குறித்த காரணிகள் சந்தைக்கு சாதகமாகவே வந்து கொண்டுள்ளன. இதற்கிடையில் வரவிருக்கும் ஃபெடரல் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் பற்றிய முக்கிய அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கபபடுகிறது. ஏற்கனவே பத்திர சந்தையானது ஏற்றம் கண்டு வரும் நிலையில், அமெரிக்க டாலரின் மதிப்பு ஏற்றம் கண்டு வருகின்றது. இதற்கிடையில் பணவீக்கத்தின் மத்தியில் வட்டி அதிகரிக்கப்பட்டால் டாலரின் மதிப்பானது இன்னும் வலுவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடக்கம் எப்படி?
இதற்கிடையில் இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே இந்திய சந்தைகள் ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 294.54 புள்ளிகள் அதிகரித்து, 60,039.19 புள்ளிகளாகவும், நிஃப்டி 74.30 புள்ளிகள் அதிகரித்து, 17,887 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதனையடுத்து தொடக்கத்திலும் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 402.36பு ள்ளிகள் அதிகரித்து, 60,147.01 புள்ளிகளாகவும், நிஃப்டி 112 புள்ளிகள் அதிகரித்து, 17,924.70 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1894 பங்குகள் ஏற்றத்திலும், 396 பங்குகள் சரிவிலும், 182 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ் நிலவரம்
சென்செக்ஸ் நிஃப்டி குறியீட்டில் உள்ள பிஎஸ்இ ஹெல்த்கேர் தவிர, மற்ற அனைத்து குறியீடுகளும் சற்று ஏற்றத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி ஆட்டோ, பேங்க் நிஃப்டி 1% மேலாக ஏற்றத்தில் காணப்படுகின்றன. மற்ற குறியீடுகள் 1% கீழாக ஏற்றத்திலும் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள மாருதி சுசுகி, ஹீரோ மோட்டோகார்ப், ஐடிசி, யுபிஎல், கோடக் மகேந்திரா உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினராகவும், இதே விப்ரோ, ஏசியன் பெயிண்ட்ஸ், டெக் மகேந்திரா, ஹெச் சி எல் டெக், டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டீஸ் உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளது.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள மாருதி சுசுகி, ஐடிசி, கோடக் மகேந்திரா, ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் மட்டுமே டாப் கெயினராகவும், இதே போல விப்ரோ,ஹெச் சி எல் டெக், ஏசியன் பெயிண்ட்ஸ், டெக் மகேந்திரா, டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டீஸ் உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம்
தற்போது 10 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 444.50 புள்ளிகள் அதிகரித்து, 60,189.25 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 132.80 புள்ளிகள் அதிகரித்து, 17,945.50 புள்ளிகளாகவும் காணப்படுகின்றது. மீண்டும் சென்செக்ஸ் 60,000 புள்ளிகளுக்கு மேலாக காணப்படுகின்றது. இன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், வங்கி பங்குகள், அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் பங்குகள் கவனிக்க வேண்டியவையாக உள்ளன.
More From GoodReturns

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?



Click it and Unblock the Notifications