நடப்பு வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான இன்றும், பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் இந்திய சந்தைகள் சிவப்பு நிறத்தில் காணப்படுகின்றன.
கடந்த சில அமர்வுகளாக சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. இதற்கிடையில் அமெரிக்க சந்தைகள் சரிவில் முடிவடைந்ததையடுத்து, ஆசிய சந்தைகள் பலவும் சரிவில் காணப்படுகின்றன.
இதற்கிடையில் இந்திய சந்தைகளும் சரிவில் காணப்படுகின்றன. இது இன்னும் சரியலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.
ஏற்ற இறக்கம் இருக்கலாம்
சீனாவின் தொழில் துறை பணவீக்க விகிதம் 13 வருட உச்சத்தினை தொட்டுள்ளது. இது மூலதன பொருட்களின் விலை அதிகரிப்பின் காரணமாக பணவீக்கம் உச்சத்தினை தொட்டுள்ளது. இது சந்தைக்கு எதிராக அமைந்துள்ளது. இந்தியாவினை பொறுத்தவரையில் பொருளாதாரம் தற்போது வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ள நிலையில், இங்கேயும் பணவீக்கம் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இது சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.
ஆரம்பமே சரிவு தான்
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சற்று சரிவில் தான் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்திலும் சற்று சரிவில் தான் தொடங்கியது. குறிப்பாக சென்செக்ஸ் 71.63 புள்ளிகள் குறைந்து, 58,180 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 23.3 புள்ளிகள் குறைந்து, 17,330.65 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இன்டெக்ஸ் நிலவரம்
இதனையடுத்து இன்றும் பல குறியீடுகள் சரிவிலேயே காணப்படுகின்றன. குறிப்பாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சரிவிலேயே காணப்பட்டன. எனினும் நிஃப்டி பிஎஸ்இ, பிஎஸ்இ ஆயில் & கேஸ், பிஎஸ்இ மெட்டல்ஸ், பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி, , பிஎஸ்இ கேப்பிட்டல் குட்ஸ், நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ மிட் கேப், பிஎஸ்இ ஸ்மால் கேப் உள்ளிட்ட குறியீடுகள் மாற்றமின்றி காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள ஓ.என்.ஜி.சி, டாடா மோட்டார்ஸ், நெஸ்ட்லே , ஐஓசி, பிரிட்டானியா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, டிவிஸ் லேப், விப்ரோ உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள நெஸ்ட்லே, இந்தஸிந்த் வங்கி, பார்தி ஏர்டெல், என்.டி.பி.சி, கோடக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஆக்ஸிஸ் வங்கி, டெக் மகேந்திரா, அல்ட்ராடெக் சிமெண்ட், பஜாஜ் பைனான்ஸ், ஹெச்.டி.எஃப்.சி வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சந்தையில் தற்போதைய நிலவரம்
தற்போது சென்செக்ஸ் 69.92 புள்ளிகள் குறைந்து, 58,180.34 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 19.2 புள்ளிகள் குறைந்து, 17,333.85 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
இதற்கிடையில் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பானது சற்று சரிந்து, 73.82 ரூபாயாக தொடங்கியுள்ளது.
கொரோனா மூன்றாம் அலை அச்சத்தின் மத்தியில், பணவீக்கமும் அதிகரித்து வருகின்றது. இதற்கிடையில் சந்தையில் ஏற்றம் இறக்கம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது.
குளோசிங் பெல்
இன்று காலை தொடக்கத்திலேயே சற்று சரிவில் தொடங்கிய இந்திய சந்தைகள், முடிவில் பெரியளவில் மாற்றமின்றி முடிவடைந்துள்ளன. குறிப்பாக சென்செக்ஸ் 55 புள்ளிகள் அதிகரித்து, 58,305 புள்ளிகளாகவும், நிஃப்டி 16 புள்ளிகள் அதிகரித்து, 17,369.25 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது. தொடர்ச்சியாக மூன்றாவது அமர்வாக இன்று சந்தையானது பெரியளவில் மாற்றமின்றி முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!

ஒரே நாளில் ரூ14 லட்சம் கோடிக்கு மேல் லாபம்! சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்!ஏன் தெரியுமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

டிரம்ப் கொடுத்த ஸ்பீச்: ரத்தக்களரியான பங்குச் சந்தை? சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications