சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்.. நிஃப்டியின் நிலவரம் என்ன..!

இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான சென்செக்ஸ் நல்ல ஏற்றத்தில் காணப்படுகின்றது.

அமெரிக்காவின் பத்திர சந்தையானது தொடர்ந்து நல்ல ஏற்றம் கண்டு வரும் நிலையில், அமெரிக்க சந்தையானது கடந்த அமர்வில் ஏற்றத்தில் முடிவடைந்ததையடுத்து, ஆசிய சந்தைகள் பலவும் ஏற்றத்தில் காணப்பட்டது.

இதற்கிடையில் தான் இந்திய சந்தையும் ஏற்றத்தில் காணப்படுகின்றது. கடந்த சில அமர்வுகளாக தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வெளியேறி வந்தாலும், தொடர்ந்து உள் நாட்டு முதலீடுகள் மதிப்பானது அதிகரித்து வருகின்றது.

 காலாண்டு முடிவுகள்

காலாண்டு முடிவுகள்

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, டாடா பவர், ஏசிசி, பாஸ்க், நய்கா, அரபிந்தோ பார்மா, பெர்ஜர் பெயிண்ட்ஸ், அப்போட் இந்தியா, டிசிபி பேங்க், இன்ஜினியர்ஸ் இந்தியா, இந்தியா புல்ஸ் ஹவுஸிங் பைனான்ஸ், ஜிண்டால் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்ஸ், லூமக்ஸ் ஆட்டோ டெக்னால்ஜிஸ், பெட்ரோநெட் எல்என்ஜி, ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா, பிரிக்கால், சாயில், ஸ்பென்சர்ஸ் ரீடெயில் உள்ளிட்ட பல நிறுவனங்களும் காலாண்டு முடிவுகளை வெளியிடவுள்ளன.

முதலீடுகள் வெளியேற்றம்

முதலீடுகள் வெளியேற்றம்

என்.எஸ்.இ தரவுகளின் படி பிப்ரவரி 8 நிலவரப்படி, 1967.89 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று அன்னிய முதலீட்டாளர்கள் வெளியேறியுள்ளனர். இதே உள்நாட்டு முதலீட்டாளர்கள் 1115 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கிக் குவித்துள்ளனர். இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

 தொடக்கம் எப்படி?

தொடக்கம் எப்படி?

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சென்செக்ஸ் 375.53 புள்ளிகள் அதிகரித்து, 58,184.11 புள்ளிகளாகவும், நிஃப்டி 132.90 புள்ளிகள் அதிகரித்து, 17,399.70 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 340.790 புள்ளிகள் அதிகரித்து, 58,149.37 புள்ளிகளாகவும், நிஃப்டி 91.60 புள்ளிகள் அதிகரித்து, 17,353 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 1338 பங்குகள் ஏற்றத்திலும்,456 பங்குகள் சரிவிலும், 56 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

 இன்டெக்ஸ்

இன்டெக்ஸ்

சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகள் ஏற்றத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக பிஎஸ்இ டெக், பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள்,நிஃப்டி ஆட்டோ, நிஃப்டி ஐடி உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாக ஏற்றத்தில் காணப்படுகின்றன. மற்ற குறியீடுகள் ஏற்றத்தில் இருந்தாலும், பெரியளவிலான ஏற்றத்தில் இல்லை.

 நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீட்டில் உள்ள கோல் இந்தியா, பஜாஜ் ஆட்டோ, மாருதி சுசுகி, ஹெச்.சி.எல் டெக், ஹிண்டால்கோ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஐஓசி, சன் பார்மா, பிபிசிஎல், என்.டி.பி.சி, ஹெச்.டிஎஃப்.சி லைஃப் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

 சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள மாருதி சுசுகி, பஜாஜ் பின்செர்வ், ஹெச்.சி.எல் டெக், டைட்டன் நிறுவனம், ஹெச்.டி.எஃப்.சி வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே சன் பார்மா, என்.டி.பி.சி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

 தற்போது நிலவரம்

தற்போது நிலவரம்


10.20 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் முன்னதாக 500 புள்ளிகளுக்கு மேலாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், தற்போது சென்செக்ஸ் 454.26 புள்ளிகள் அதிகரித்து, 58,263.93 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 135.7 புள்ளிகள் அதிகரித்து, 17,402.45 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+