நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன.
இது இந்தியாவில் அதிகரித்து வரும் இரண்டாம் கட்ட பரவல் மத்தியிலும், அமெரிக்க இந்தியாவுக்கு உதவ முன்வந்துள்ளது. குறிப்பாக தடுப்பூசி உற்பத்திக்கு தேவையான மூலதன பொருட்களை சப்ளை செய்ய ஒப்புக் கொண்டுள்ளது. இது தவிர மருத்துவ பொருட்கள் மீதான கட்டுப்பாடுகளையும் தளர்த்தியுள்ளது.
இதற்கிடையில் கடந்த அமர்வில் அமெரிக்க பங்கு சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளன. இதன் காரணமாக இந்திய சந்தைகளும் சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகின்றன.
இந்திய சந்தைகள் தொடக்கம்
சர்வதேச சந்தையின் எதிரொலியாக குறிப்பாக இன்று தொடக்கத்தில் சென்செக்ஸ் 328.37 புள்ளிகள் அதிகரித்து, 48,206.82 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 95.80 புள்ளிகள் அதிகரித்து, 14,437.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1,214 பங்குகள் ஏற்றத்திலும், 263 பங்குகள் சரிவிலும், 79 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பிஎஸ்இ ஹெல்த்கேர் குறியீடு தவிர, மற்ற அனைத்து குறியீடுகளும் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீட்டில் உள்ள ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பௌனான்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், ரிலையன்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச் சி எல் டெக், பிரிட்டானியா, சிப்லா, டெக் மகேந்திரா, சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், எஸ்பிஐ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்சிஎல் டெக், டெக் மகேந்திரா, சன் பார்மா, எண்டிபிசி, பவர் கிரிட் கார்ப் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம் என்ன?
இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 16 பைசா அதிகரித்து, 74.85 ரூபாயாகவும் ஏற்றம் கண்டுள்ளது. கடந்த அமர்வில் இது 75.01 ரூபாயாக முடிவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications