இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் 4வது வர்த்தக நாளான இன்று, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் சற்றே ஏற்றத்தில் தொடங்கின.எனினும் தற்போது சற்று சரிவில் காணப்படுகின்றன.
கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் பலவும் சரிவில் முடிவடைந்திருந்தன. இதற்கிடையில் இன்று தொடக்கத்தில் ஆசிய சந்தைகள் பலவும் சரிவில் தொடங்கியுள்ளன.
இதன் எதிரொலியாகத் தான் ஏற்றத்தில் சந்தைகள் தொடங்கியிருந்தாலும், தற்போது சரிவில் காணப்படுகின்றன.
உக்ரைன் பதற்றம்
உக்ரைன் ரஷ்யா இடையில் நிலவி வந்த பதற்றமான நிலைக்கு மத்தியில், ரஷ்ய படைகள் பின் வாங்கியதாக ரஷ்ய அதிபர் தெரிவித்தார். ஆனால் நேட்டோவும், அமெரிக்காவும் எல்லை அருகே படைகளை குவித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளன. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தினையே உருவாக்கியுள்ளது.
முதலீடுகள் வெளியேற்றம்
பிப்ரவரி 16 நிலவரப் படி, 1890.96 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை அன்னிய முதலீட்டாளர்கள் விற்று வெளியேறியுள்ளனர். அதேசமயம் உள்நாட்டு முதலீட்டாளர்கள், 1180.14 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர் என என்.எஸ்.இ தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
தொடக்கம் எப்படி?
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சென்செக்ஸ் 394.76 புள்ளிகள் அதிகரித்து, 58,391.44 புள்ளிகளாகவும், நிஃப்டி 81.80 புள்ளிகள் அதிகரித்து, 17,404 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 258.53 புள்ளிகள் அதிகரித்து, 58,255.21 புள்ளிகளாகவும், நிஃப்டி 92.10 புள்ளிகள் அதிகரித்து, 17,414.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 1387 பங்குகள் ஏற்றத்திலும், 360 பங்குகள் சரிவிலும், 84 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ்
சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் ஏற்றத்திலேயே காணப்படுகின்றன. எனினும் பெரியளவில் ஏற்றம் காணவில்லை. அதேசமயம் பிஎஸ்இ சென்செக்ஸ், பேங்க் நிஃப்டி, நிஃப்டி ஐடி, பிஎஸ்இ ஸ்மால் கேப், பிஎஸ்இ டெக் உள்ளிட்ட குறியீடுகள் சரிவிலும் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப், சிப்லா, டாடா மோட்டார்ஸ், டாடா கன்சியூமர் டியூரபிள் குட்ஸ், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே இந்தஸ்இந்த் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட், ஐசிஐசிஐ வங்கி, பிரிட்டானியா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பவர் கிரிட் கார்ப், ரிலையன்ஸ், எம்&எம், என்.டி.பி.சி, டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஆக்ஸிஸ் வங்கி, இந்தஸ்இந்த் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம்
10.07மணி நிலவரப்படி, தற்போது சென்செக்ஸ் 45.75 புள்ளிகள் குறைந்து, 57,950.93 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி8.35 புள்ளிகள் குறைந்து, 17,330.55 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
More From GoodReturns

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!



Click it and Unblock the Notifications