400 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் சென்செக்ஸ்..வார இறுதியில் ஆறுதல் கொடுத்த இந்திய சந்தைகள்..!

இந்திய பங்கு சந்தைகள் இந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன.

எனினும் கடந்த சில அமர்வுகளாக ஏற்றத்தினை கண்டு வந்த அமெரிக்க சந்தையானது கடந்த அமர்வில் சரிவினைக் கண்டுள்ளது. இதன் எதிரொலி காரணமாக சில சந்தைகள் சரிவில் காணப்பட்டாலும், இந்திய சந்தைகள் உள்ளிட்ட சிலவை ஏற்றத்தில் காணப்படுகின்றன.

இதற்கிடையில் சந்தையில் மேலும் அழுத்தத்தினை கொடுக்கும் விதமாக கொரோனாவின் தாக்கமானது, தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இது மேற்கொண்டு லாக்டவுனை கடுமையாக்க வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய காரணிகள்

முக்கிய காரணிகள்

அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் என்பது அதிகரித்து வரும் நிலையில், வேலையின்மை நலன் விகிதமானது அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் அமெரிக்காவில் வர்த்தக பற்றாக்குறையானது சந்தைக்கு எதிராக ஏற்றம் கண்டுள்ளது. இது இறக்குமதிகள் வரலாறு காணாத அளவு அதிகரித்த நிலையில், இதுவும் சரிவுக்கு வழிவகுத்துள்ளது. இதற்கிடையில் இது பொருளாதாரத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடக்கம் எப்படி?

தொடக்கம் எப்படி?

இதற்கிடையில் இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே இந்திய சந்தைகள் ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 117.62 புள்ளிகள் அதிகரித்து, 59,719.46 புள்ளிகளாகவும், நிஃப்டி 66.70 புள்ளிகள் அதிகரித்து, 17,81.60 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

இதனையடுத்து தொடக்கத்திலும் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 301.60 புள்ளிகள் அதிகரித்து, 59,903.44 புள்ளிகளாகவும், நிஃப்டி 95.10 புள்ளிகள் அதிகரித்து, 17,841 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1813 பங்குகள் ஏற்றத்திலும், 407 பங்குகள் சரிவிலும், 152 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

இன்டெக்ஸ் நிலவரம்

இன்டெக்ஸ் நிலவரம்

சென்செக்ஸ் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் சற்று ஏற்றத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக பேங்க் நிஃப்டி, பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள் குட்ஸ், பிஎஸ்இ ஆயில் & கேஸ், நிஃப்டி பிஎஸ்இ உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாக ஏற்றத்தில் காணப்படுகின்றன. மற்ற குறியீடுகள் 1% கீழாக ஏற்றத்திலும் காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீட்டில் உள்ள ஓ என் ஜி சி, டைட்டன் நிறுவனம், எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, கிரசிம் உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினராகவும், இதே ஹெச்.டி.எஃப்.சி, டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டீஸ், பஜாஜ் பைனான்ஸ், சிப்லா, ஈச்சர் மோட்டார்ஸ் உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளது.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஐசிஐசிஐ வங்கி,எஸ்பிஐ, விப்ரோ, டைட்டன் நிறுவனம், எஃப்.சி வங்கி உள்ளிட்ட பங்குகள் மட்டுமே டாப் கெயினராகவும், இதே போல ஹெச்,டி.எஃப்.சி, டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டீஸ், பஜாஜ் பைனான்ஸ்,லார்சன், அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

தற்போதைய நிலவரம்

தற்போதைய நிலவரம்

தற்போது 10.05 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 505.94 புள்ளிகள் அதிகரித்து, 60,107.78 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 146.1 புள்ளிகள் அதிகரித்து, 17,892 புள்ளிகளாகவும் காணப்படுகின்றது. சென்செக்ஸ் குறிப்பாக 60,000 புள்ளிகளுக்கு மேலாக காணப்படுகின்றது. இன்று ஆயில் & கேஸ், ரியால்டி, வங்கி பங்குகள் கவனிக்க வேண்டியவையாக உள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+