52,100 மேல் சென்செக்ஸ் வர்த்தகம்.. நிஃப்டி 15,700 அருகில் வர்த்தகம்..!

நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் இந்திய சந்தைகள் சற்று ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றன.

கடந்த அமர்வில் சந்தை சரிவிலேயே முடிவடைந்தது. எனினும் இன்று ப்ரீ ஒபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் காணப்பட்டது.

அதோடு பல சர்வதேச சந்தையில் உள்ள சாதகமான காரணிகளுக்கு மத்தியில், சந்தை சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. அதோடு பணப்புழக்கத்தினை அதிகரிக்கும் விதமாக ரெப்போ விகிதமும் மாற்றப்படவில்லை. இதுவும் சந்தைக்கு சாதகமாக உள்ளது.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 88.37 புள்ளிகள் அதிகரித்து, 52,188.42 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 10.90 புள்ளிகள் அதிகரித்து, 15,681.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்திலும் சற்று ஏற்றத்தில் தான் தொடங்கியது. சென்செக்ஸ் 85.53 புள்ளிகள் அதிகரித்து, 52,185.58 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 37.90 புள்ளிகள் அதிகரித்து, 15,708.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 1678 பங்குகள் ஏற்றத்திலும், 270 பங்குகள் சரிவிலும், 78 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பிஎஸ்இ ஹெல்த்கேர் குறியீடுகள் தவிர, மற்றவை சற்று ஏற்றத்திலும் காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள அதானி போர்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், ஸ்ரீ சிமெண்ட்ஸ், யுபிஎல், என்.டி.பி.சி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்செர்வ், ஹெச்.டி.எஃப்.சி, சிப்லா, ஹெச்.டி.எஃப்.சி லைஃப் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள அல்ட்ரா டெக் சிமெண்ட், என்.டி.பி.சி, பவர் கிரிட் கார்ப், ஹெச்.டி.எஃப்.சி, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்செர்வ், ஹெச்.டி.எஃப்.சி, டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சந்தையில் தற்போதைய நிலவரம்

சந்தையில் தற்போதைய நிலவரம்

இந்திய ரூபாய் மதிப்பானது 15 பைசா அதிகரித்து, 72.85 தொடங்கியது. இது கடந்த வெள்ளிக்கிழமையன்று முடிவில் 73 ரூபாயாகவும் முடிவடைந்தது.

இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 96.07 புள்ளிகள் அதிகரித்து, 52,196.12 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 50.70 புள்ளிகள் அதிகரித்து, 15,720.95 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+