சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்.. நிஃப்டி மீண்டும் 14,450க்கு அருகில் வர்த்தகம்..!

நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன. முந்தைய அமர்விலும், பலமான ஏற்றத்தினை கண்ட நிலையில், இன்றும் ஏற்றம் கண்டுள்ளது.

இந்த வாரத்தில் எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி உள்ளது. இதற்கிடையில் பல சர்வதேச காரணிகள் சந்தைக்கு சாதகமாகவே உள்ளது. கொரோனா வழக்குகள் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து, பல சர்வதேச நாடுகள் இந்தியாவுக்கு சாதகமாக உதவி வருகின்றன.

இது சந்தைக்கு சாதகமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. எனினும் இந்தியாவில் அதிகரித்து வரும் இரண்டாம் கட்ட பரவல் காரணமாக, லாக்டவுன் நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது இன்னும் கடுமையாகலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. ஆக இது ஏற்ற இறக்கத்திற்கு வழிவகுக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 95.58 புள்ளிகள் அதிகரித்து, 48,482.09 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 0.35% புள்ளிகள் அதிகரித்து, 14,435.00 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 164.54 புள்ளிகள் அதிகரித்து, 48,550.54 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 57.70 புள்ளிகள் அதிகரித்து, 14,542.70 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1017 பங்குகள் ஏற்றத்திலும், 225 பங்குகள் சரிவிலும், 62 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

 

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீட்டில் உள்ள ஹிண்டால்கோ, பவர் கிரிட் கார்ப், டாடா ஸ்டீல், ரிலையன்ஸ், ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்டிஎஃப்சி லைஃப், ஆக்சிஸ் வங்கி, எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், டெக் மகேந்திரா, கோடக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

 

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பவர் கிரிட் கார்ப், ரிலையன்ஸ், பார்தி ஏர்டெல், லார்சன், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஆக்சிஸ் வங்கி, டெக் மகேந்திரா, டிசிஎஸ், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், டெக் மகேந்திரா, கோடக் மகேந்திரா, நெஸ்டில், ஹெச் சி எல் டெக் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

ரூபாய் மதிப்பு

ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 5 பைசா அதிகரித்து, 74.67 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது முந்தைய அமர்வில் 74.72 ரூபாயாக முடிவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 280.35 புள்ளிகள் அதிகரித்து, 48,666.86 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 83.85 புள்ளிகள் அதிகரித்து, 14,568.85 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+