செம குஷியில் முதலீட்டாளர்கள்.. 350 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் சென்செக்ஸ்.. !

நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் நல்ல ஏற்றத்தில் காணப்படுகின்றன.

நேற்றும் சற்று ஏற்றத்தில் முடிவடைந்திருந்த நிலையில், இன்றும் சற்று ஏற்றத்தில் உள்ளது, முதலீட்டாளர்களுக்கு சற்று ஆறுதலைக் கொடுத்துள்ளது எனலாம்.

நாட்டில் கொரோனாவின் தாக்கம் மிக மோசமாக இருந்து வரும் நிலையில், கொரோனா தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகின்றது. இதுவும் சந்தைக்கு மிகப்பெரிய ஆதரவாக பார்க்கப்படுகிறது.

காப்புரிமை சட்டம் தற்காலிகமாக ரத்து

காப்புரிமை சட்டம் தற்காலிகமாக ரத்து

இதற்கிடையில் அமெரிக்க தடுப்பூசிகளின் காப்புரிமை சட்டங்களை தற்காலிகமாக தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவினை ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் அமெரிக்காவில் எதிர்பார்ப்பினை விட மிகச் சிறப்பாக பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டுள்ளதையடுத்து, அமெரிக்க பங்கு சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளன.

என்ன காரணம்

என்ன காரணம்

அதோடு ஒரு புறம் கொரோனாவின் தாக்கம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், மறுபுறம் அமெரிக்க பங்கு சந்தைகள் மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளன. அதோடு பொருளாதாரமும் வளர்ச்சி காண ஆரம்பித்துள்ள நிலையில், பங்கு சந்தைகள் மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளன. இதனால் பங்கு சந்தையில் முதலீடுகள் அதிகரிக்க தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 184.58 புள்ளிகள் அதிகரித்து, 49,134.34 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி சற்று 76.10 புள்ளிகள் அதிகரித்து, 14,800 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 338.14 புள்ளிகள் அதிகரித்து, 49,287.90 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 106.60 புள்ளிகள் அதிகரித்து, 14,831.40 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1155 பங்குகள் ஏற்றத்திலும், இதே 272 பங்குகள் சரிவிலும், 63 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்படுகிறது.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள டாடா ஸ்டீல், ஜேஎஸ்.டபள்யூ ஸ்டீல், இந்தஸிந்த் வங்கி, எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், ஹிண்டால்கோ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டாடா கன்சியூமர் புராடக்ஸ், ஹீரோ மோட்டோ கார்ப், விப்ரோ உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள இந்தஸிந்த் வங்கி, எம் & எம், ஏசியன் பெயிண்ட்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே பஜாஜ் ஆட்டோ, பவர் கிரிட் கார்ப், நெஸ்டில் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசராகவும் உள்ளன.

ரூபாய்

ரூபாய்

இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 374.48 புள்ளிகள் அதிகரித்து, 49,324.24 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 104.25 புள்ளிகள் அதிகரித்து, 14,829.05 புள்ளிகளாகவும் காணப்படுகிறது. எப்படி இருப்பினும் இன்று வார இறுதி வர்த்தக நாள் என்பதால், மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் புராபிட் புக்கிங் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+