நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன. முந்தைய அமர்விலும் சற்று ஏற்றத்தில் முடிவடைந்திருந்த நிலையில், இன்றும் ஏற்றம் கண்டுள்ளது.
நாளை எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி என்பதால் சந்தைகள் அதிக ஏற்ற இறக்கத்துடன் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, இது முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் தங்களது லாபத்தினை புக் செய்வதாலும், ரோல் ஓவர் செய்வதாலும் இருக்கும் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையில் பல சர்வதேச காரணிகள் சந்தைக்கு சாதகமாகவே உள்ளது. இந்தியாவை பொறுத்த வரையில் கொரோனா வழக்குகள் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், பல சர்வதேச நாடுகளும் இந்தியாவுக்கு உதவி செய்து வருகின்றன. ஆக இது இந்தியா விரைவில் மீண்டு வர வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியிருப்பினும் மீட்பு தாமதமானால், இது பொருளாதார சரிவுக்கு வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தைகள் தொடக்கம்
குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சந்தைகள் சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 279.06 புள்ளிகள் அதிகரித்து, 49,223.20 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 91.50 புள்ளிகள் அதிகரித்து, 14,744.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 238.60 புள்ளிகள் அதிகரித்து, 49,182.74 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 70.30 புள்ளிகள் அதிகரித்து, 14,723.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1142 பங்குகள் ஏற்றத்திலும், 242 பங்குகள் சரிவிலும், 55 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பிஎஸ்இ மெட்டல்ஸ் தவிர, மற்ற அனைத்து குறியீடுகளும் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீட்டில் உள்ள ஈச்சர் மோட்டார்ஸ், பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் பின்செர்வ், இந்தஸிந்த் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹிண்டால்கோ, ஜேஎஸ்டபள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்செர்வ், இந்தஸிந்த் வங்கி, எம் & எம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஆக்சிஸ் வங்கி, நெஸ்டில், டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 15 பைசா அதிகரித்து, 74.51 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது முந்தைய அமர்வில் 74.66 ரூபாயாக முடிவடைந்திருந்தது. இது சந்தையில் முதலீடுகள் அதிகரித்து வரும் நிலையில் ஏற்றத்தில் காணப்படுகிறது.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 493.93 புள்ளிகள் அதிகரித்து, 49,438.07 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 131.40 புள்ளிகள் அதிகரித்து, 14,784.45 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

ஒரே நாளில் ரூ14 லட்சம் கோடிக்கு மேல் லாபம்! சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்!ஏன் தெரியுமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

டிரம்ப் கொடுத்த ஸ்பீச்: ரத்தக்களரியான பங்குச் சந்தை? சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி?

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?



Click it and Unblock the Notifications