மீண்டும் உச்சத்தில் இந்திய சந்தைகள்.. சென்செக்ஸ் 48,300க்கு மேல் வர்த்தகம்..!

கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, இந்திய சந்தைகள் புதிய உச்சத்தினை தொட்டு வருகின்றன. இந்த நிலையில் வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான இன்றும் சந்தை ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.

முந்தைய அமர்வில் அமெரிக்காவின் பங்கு சந்தைகள் உச்சத்தினை எட்டியுள்ள நிலையில், ஆசிய சந்தைகளும் ஏற்றத்தில் தான் காணப்படுகின்றன. அமெரிக்காவின் ஊக்கத் தொகை பற்றிய அறிவிப்புகள் பொருளாதாரத்திற்கு கைகொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் இன்று சந்தையின் தொடக்கத்தில் சென்செக்ஸ் 285.67 புள்ளிகள் அதிகரித்து, 48,459.73 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 83.70 புள்ளிகள் அதிகரித்து, 14,230 புள்ளிகள் ஆகவும் தொடங்கியது.

நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்

நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்

இதற்கிடையில் நிஃப்டி ஐடி, பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், பிஎஸ்இ எஃப்எம்சிஜி, பிஎஸ்இ டெக் உள்ளிட்ட குறியீடுகள் சற்று சரிவில் காணப்படும் நிலையில், மற்ற குறியீடுகள் அனைத்தும் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ, அதானி போர்ட்ஸ், பவர் கிரிட் கார்ப், லார்சன் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே டைட்டன் நிறுவனம், இன்ஃபோசிஸ், ஹெச்யுஎல், டிவிஸ் லேப், டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள லார்சன், பவர் கிரிட் கார்ப், இந்தஸிந்த் வங்கி, பார்தி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே டைட்டன் நிறுவனம், ஹெச்யுஎல், டிசிஎஸ், இன்ஃபோசிஸ், டிவிஸ் லேப், உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

என்ன காரணம்?

என்ன காரணம்?

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு பெரியளவில் மாற்றமில்லாமல் 73.11 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது கடந்த புதன்கிழமையன்று 73.10 ரூபாயாக முடிவடைந்திருந்தது. அமெரிக்கா பங்கு சந்தைகள் சற்று ஏற்றத்தில் முடிவடைந்துள்ள நிலையில், ஆசிய சந்தைகள் சிலவும் ஏற்றத்தில் தான் காணப்படுகின்றன. இதன் எதிரொலியாக ரூபாயின் மதிப்பு சற்று மாற்றமில்லாமலே தொடங்கியுள்ளது.

தற்போதைய நிலவரம்

தற்போதைய நிலவரம்

இந்திய சந்தைகள் தொடக்கத்தில் ஏற்றத்தில் காணப்பட்டாலும், தற்போது சர்வதேச சந்தையின் எதிரொலியாக சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. இது தற்போது சென்செக்ஸ் 92.87 புள்ளிகள் அதிகரித்து, 48,266.93 ஆகவும், இதே நிஃப்டி 35.70 புள்ளிகள் அதிகரித்து, 14,181.95 ஆகவும் காணப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+