கடந்த சில வர்த்தக தினங்களாகவே முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, இந்திய சந்தைகள் புதிய உச்சத்தினை தொட்டு வந்தன.
இந்த நிலையில் வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று பெரியளவில் மாற்றமில்லாமல் சற்று சரிவில் காணப்படுகிறது.
இதற்கிடையில் இன்று ப்ரீ ஒபனிங் சந்தையில் சற்று ஏற்றத்தில் காணப்பட்டது. தொடக்கத்தில் சென்செக்ஸ் 107.64 புள்ளிகள் அதிகரித்து, 48,545.42 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 29.90 புள்ளிகள் அதிகரித்து, 14,228.50.90 புள்ளிகள் ஆகவும் தொடங்கியது. இதனையடுத்து 1151 புள்ளிகள் ஏற்றம் கண்டும், 270 பங்குகள் சரிவிலும், 64 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்
இதற்கிடையில் பெரும்பாலான குறியீடுகள் மாற்றமில்லாமலும், சிலவை சரிவிலும் காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள கெயில், ஒஎன்ஜிசி, பார்தி ஏர்டெல், எஸ்பிஐ, டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஐடிசி, ரிலையன்ஸ், ஹெச் யு எல், பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்செர்வ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்
இதே சென்செக்ஸ் குறியீட்டில் ஒஎன்ஜிசி, பார்தி ஏர்டெல், எஸ்பிஐ, டெக் மகேந்திரா, டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஐடிசி, ரிலையன்ஸ், ஹெச் யு எல், பஜாஜ் பைனான்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
என்ன காரணம்?
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு பெரியளவில் மாற்றமில்லாமல் 73.17 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது கடந்த செவ்வாய்கிழமையன்றும் 73.17 ரூபாயாக முடிவடைந்திருந்தது. அமெரிக்கா பங்கு சந்தைகள் சற்று ஏற்றத்தில் முடிவடைந்திருந்தாலும், ஆசிய சந்தைகள் சிலவை சற்று சரிவில் காணப்படுகின்றன. இதன் எதிரொலியாக இந்திய சந்தையும் சற்று தடுமாற்றத்தில் காணப்படுகிறது.
தற்போதைய நிலவரம்
இந்திய சந்தைகள் தொடக்கத்தில் ஏற்றத்தில் காணப்பட்டாலும், தற்போது சர்வதேச சந்தையின் எதிரொலியாக சற்று சரிவில் காணப்படுகிறது. இது தற்போது சென்செக்ஸ் 14.60 புள்ளிகள் குறைந்து, 48,423.18 ஆகவும், இதே நிஃப்டி 1.30 புள்ளிகள் அதிகரித்து, 14,200.80 ஆகவும் காணப்படுகிறது.
More From GoodReturns

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?



Click it and Unblock the Notifications