opening bell..இறுதி வர்த்தக நாளில் ஏற்றத்தில் இந்திய சந்தைகள்..சென்செக்ஸ் 48,800க்கு மேல் வர்த்தகம்!

நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன. கடந்த சில வர்த்தக அமர்வுகளாக சரிவிலேயே காணப்பட்ட இந்திய சந்தைகள், இன்று முதலீட்டாளர்களுக்கு சற்றே ஆறுதலைக் கொடுக்கும் விதமாக சற்று ஏற்றம் கண்டுள்ளது.

ஏனெனில் கடந்த சில வர்த்தக அமர்வுகளில் முதலீட்டாளர்கள் தங்களுக்கு கிடைத்த லாபத்தினை புக் செய்த நிலையில், ரோல் ஓவர் செய்தனர். இதன் காரணமாக சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகமாக காணப்பட்டது.

சர்வதேச சந்தையில் நிலவி வரும் பல்வேறு காரணிகளுக்கு மத்தியில், இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனாவின் இரண்டாம் கட்ட பரவலும் முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையினை ஏற்படுத்தியது. ஆக இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது. எனினும் இன்று சில சாதகமான காரணிகளுக்கு மத்தியில் சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 294.51 புள்ளிகள் அதிகரித்து, 48,734.63 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 83.80 புள்ளிகள் அதிகரித்து, 14,408.70 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 487.40 புள்ளிகள் அதிகரித்து, 48,927.57 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 152.90 புள்ளிகள் அதிகரித்து, 14,477.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 1036 பங்குகள் ஏற்றத்திலும், 222 பங்குகள் சரிவிலும், 48 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பிஎஸ்இ ஹெல்த்கேர் தவிர, மீதமுள்ள அனைத்து குறியீடுகளும் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள பஜாஜ் பின்செர்வ். டாடா மோட்டார்ஸ், ஹெச்யுஎல், கெயில், ஹிண்டால்கோ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பவர் கிரிட் கார்ப், ரிலையன்ஸ், ஓஎன்ஜிசி, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், யுபிஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பஜாஜ் பின்செர்வ். ஹெச்யுஎல், பஜாஜ் ஆட்டோ, ஏசியன் பெயிண்ட்ஸ், ஹெச்டிஎஃப்சி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பவர் கிரிட் கார்ப், ரிலையன்ஸ், ஓஎன்ஜிசி, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சந்தையில் தற்போதைய நிலவரம்

சந்தையில் தற்போதைய நிலவரம்

இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 318.54 புள்ளிகள் அதிகரித்து, 48,816.67 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 126.35 புள்ளிகள் அதிகரித்து, 14,451.25 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

தொடர்ந்து அதிகரித்து வரும் டாலரின் மதிப்பு, அதிகரித்து வரும் அமெரிக்க பத்திர லாபம், கொரோனா தடுப்பூசி பற்றிய சாதகமான அறிவிப்புகள், அமெரிக்க பொருளாதாரம் குறித்த சாதகமான டேட்டாக்கள் உள்ளிட்ட குறியீடுகள் சாதகமாக உள்ள நிலையில் சந்தை தொடர்ந்து ஏற்றத்தினைக் கண்டு வருகிறது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+