நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன.
நேற்று சரிவினைக் கண்ட நிலையில், இன்று சற்று ஏற்றத்தில் உள்ளது முதலீட்டாளர்களுக்கு சற்று ஆறுதலைக் கொடுத்துள்ளது எனலாம்.
சீனாவின் பொருளாதாரம் குறித்த அறிக்கையினால், ஆசிய சந்தைகள் சிலவும் சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. இதற்கிடையில் அமெரிக்காவின் வலுவான பொருளாதாரம் குறித்த டேட்டாவும் சந்தைக்கு சாதகமாக அமைந்துள்ளது. இதனால் அமெரிக்க சந்தைகளும் ஏற்றத்தில் தான் முடிவடைந்துள்ளன. இதற்கிடையில் இந்திய சந்தைகளும் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன.
என்ன காரணம்
அதோடு ஒரு புறம் கொரோனாவின் தாக்கம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், மறுபுறம் அமெரிக்க பத்திர சந்தையானது சற்றே தடுமாற்றத்தில் காணப்பட்டாலும், மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. ஆக இது சந்தைக்கு சாதகமான போக்காகவும் பார்க்கப்படுகிறது. ஏனெனில் முதலீட்டாளர்கள் ரிஸ்கியான முதலீடுகளை தவிர்த்து, நல்ல லாபம் கொடுக்க கூடிய அரசாங்க பத்திரங்களை நாட தொடங்கியுள்ளனர்.
இந்திய சந்தைகள் தொடக்கம்
குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 131.88 புள்ளிகள் அதிகரித்து, 48,935.56 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி சற்று 16.60 புள்ளிகள் அதிகரித்து, 14,598 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 138.71 புள்ளிகள் அதிகரித்து, 48,942.39 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 47.20 புள்ளிகள் அதிகரித்து, 14,628.70 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 945 பங்குகள் ஏற்றத்திலும், இதே 316 பங்குகள் சரிவிலும், 51 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்படுகிறது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பேங்க் நிஃப்டி தவிர, மற்ற அனைத்து குறியீடுகளும் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள விப்ரோ, ஏசியன் பெயிண்ட்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், டாடா மோட்டார்ஸ், ஹெச்சிஎல் டெக் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டிவிஸ் லேப்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, சன் பார்மா, ரிலையன்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஏசியன் பெயிண்ட்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், ஹெச்சிஎல் டெக், ஹெச்டிஎஃப்சி. எம் & எம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே, ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, சன் பார்மா, ரிலையன்ஸ், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசராகவும் உள்ளன.
ரூபாய் மதிப்பு
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 104.51 புள்ளிகள் அதிகரித்து, 48,908.19 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 46.20 புள்ளிகள் அதிகரித்து, 15,627.65 புள்ளிகளாகவும் காணப்படுகிறது. எப்படி இருப்பினும் இன்று வார இறுதி வர்த்தக நாள் என்பதால், மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் புராபிட் புக்கிங் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

ஒரே நாளில் ரூ14 லட்சம் கோடிக்கு மேல் லாபம்! சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்!ஏன் தெரியுமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

டிரம்ப் கொடுத்த ஸ்பீச்: ரத்தக்களரியான பங்குச் சந்தை? சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications