கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் இந்திய சந்தைகள், தொடர்ந்து புதிய உச்சத்தினை தொட்டு வருகின்றன.
இன்று காலையில் ப்ரீ ஓபனிங் சந்தையில் சென்செக்ஸ் 27.43 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 49,296.75 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 49.40 புள்ளிகள் குறைந்து, 14,435.40 புள்ளிகளாக இருந்தது.
இதற்கிடையில் இன்று சந்தையின் தொடக்கத்தில் சென்செக்ஸ் 101.75 புள்ளிகள் குறைந்து, 49,167.57 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 26.80 புள்ளிகள் குறைந்து, 14,458 புள்ளிகள் ஆகவும் தொடங்கியது. இந்த நிலையில் 629 பங்குகள் ஏற்றம் கண்டும், 663 பங்குகள் வீழ்ச்சி கண்டும், 58 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்
இதற்கிடையில் நிஃப்டி, சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பெரும்பலான குறியீடுகள் சிவப்பு நிறத்திலேயேயும், சிலவை மாற்றமில்லாமலும் காணப்படுகிறது. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள டாடா மோட்டார்ஸ், கெயில், ஈச்சர் மோட்டார்ஸ், ஐஓசி, டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஏசியன் பெயிண்ட்ஸ், டைட்டன் நிறுவனம், கோடக் மகேந்திரா, ஹெச்டிஎஃப்சி லைஃப் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பார்தி ஏர்டெல், ஒஎன்ஜிசி, ரிலையன்ஸ், லார்சன், ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே சியன் பெயிண்ட்ஸ், இந்தஸிந்த் வங்கி, டைட்டன் நிறுவனம், கோடக் மகேந்திரா, ஹெச்யுஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
என்ன காரணம்?
அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 73.42 ரூபாயாக சரிவில் தொடங்கியுள்ளது. இது கடந்த அமர்வில் 73.38 ரூபாயாக முடிவடைந்திருந்தது.
சர்வதேச சந்தைகள் நிலவி வரும் ஏற்றத்தாழ்வுகளுக்கு மத்தியில் இந்த வீழ்ச்சி இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலவரம்
இந்திய சந்தைகள் தொடக்கத்திலேயே சற்று சரிவில் காணப்பட்ட நிலையில் தற்போதும், சர்வதேச சந்தையின் எதிரொலியாக சற்று சரிவில் தான் காணப்படுகிறது.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 148.69 புள்ளிகள் குறைந்து, 49,120.63 ஆகவும், இதே நிஃப்டி 14.65 புள்ளிகள் குறைந்து, 14,470.10 ஆகவும் காணப்படுகிறது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications