முதலீட்டாளர்களுக்கு நல்ல வேட்டை தான்.. தொடர் ஏற்றம்.. சென்செக்ஸ் 49,100க்கு மேல் வர்த்தகம்..!

கடந்த வாரத்திலேயே முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, தொடர்ந்து புதிய உச்சத்தினை தொட்டு வந்த இந்திய சந்தைகள், இன்று வாரத் தொடக்கத்தின் முதல் நாளான இன்றும், ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.

இன்று காலையில் ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சென்செக்ஸ் 384.98 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 49,167.49 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 224.20 புள்ளிகள் அதிகரித்து, 14,571.50 புள்ளிகளாக இருந்தது.

இதற்கிடையில் இன்று சந்தையின் தொடக்கத்தில் சென்செக்ஸ் 329.33 புள்ளிகள் அதிகரித்து, 49,111.84 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 83.93 புள்ளிகள் அதிகரித்து, 14,431 புள்ளிகள் ஆகவும் தொடங்கியது. இந்த நிலையில் 1270 பங்குகள் ஏற்றம் கண்டும், 307 பங்குகள் வீழ்ச்சி கண்டும், 86 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்

நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்

இதற்கிடையில் நிஃப்டி பேங்க், ஐடி, பிஎஸ்இ ஸ்மால் கேப், மிட் கேப் பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், பிஎஸ்இ கேப் கூட்ஸ், பிஎஸ்இ மெட்டல்ஸ், பிஎஸ்இ ஆயில் & கேஸ் உள்ளிட்ட குறியீடுகள் சற்று சரிவில் காணப்படும் நிலையில், மற்ற குறியீடுகள் அனைத்தும் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்

நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்

குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள இன்ஃபோசிஸ், டாடா மோட்டார்ஸ், ஹெச்சிஎல் டெக், விப்ரோ, ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே டாடா ஸ்டீல், ஒஎன்ஜிசி, ஹிண்டால் கோ, ஜேஎஸ்டபள்யூ, அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல் டெக்,பார்தி ஏர்டெல், ஹெச்யுஎல், ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஒஎன்ஜிசி, பஜாஜ் பைனான்ஸ், எஸ்பிஐ, ஆக்ஸிஸ் வங்கி, மாருதி சுசூகி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

என்ன காரணம்?

என்ன காரணம்?

அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 73.47 ரூபாயாக சரிவில் தொடங்கியுள்ளது. இது கடந்த அமர்வில் 73.24 ரூபாயாக முடிவடைந்திருந்தது.
சர்வதேச சந்தைகள் வலுவான ஏற்றத்தில் உள்ள நிலையில், அமெரிக்காவில் மீண்டும் ஒரு பங்கு தொகைகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்திய சந்தைகள் இன்றும் வலுவான ஏற்றத்தில் உள்ளன.

தற்போதைய நிலவரம்

தற்போதைய நிலவரம்

இந்திய சந்தைகள் தொடக்கத்திலேயே ஏற்றத்தில் காணப்பட்டது. தற்போதும் சர்வதேச சந்தையின் எதிரொலியாக சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 265.31 புள்ளிகள் அதிகரித்து, 49,047.82 ஆகவும், இதே நிஃப்டி 75.25 புள்ளிகள் அதிகரித்து, 14,422.50 ஆகவும் காணப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+