இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தினசரி தொற்றுக்களின் எண்ணிக்கையும் லட்சக்கணக்கில் இருந்து வருகின்றது. இதனால் பல மாநிலங்களிலும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு வருகின்றது.
இதற்கிடையில் இந்திய சந்தைகள் இன்று சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக ஏற்றத்தில் காணப்படுகின்றன. மாறாக சரிவினைக் காணலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று ஏற்றத்தில் காணப்படுகிறது. இது ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் சந்தைக்கு சாதகமாக வந்துள்ளதே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் அமெரிக்க சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்த நிலையில், இந்திய சந்தைகளும் இன்று கேப் அப் ஆகி தொடங்கியுள்ளன.
இந்திய சந்தைகள் தொடக்கம்
குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 320.16 புள்ளிகள் அதிகரித்து, 49,526.63 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 69.80 புள்ளிகள் அதிகரித்து, 14,893 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 289.58 புள்ளிகள் அதிகரித்து, 49,496.05 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 105.10 புள்ளிகள் அதிகரித்து, 14,928.25 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள நிஃப்டி ஐடி, பிஎஸ்இ டெக் குறியீடுகள் தவிர, மற்ற அனைத்து குறியீடுகளும் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள டாடா ஸ்டீல், டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டிஸ், ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், எஸ்பிஐ, ஹிண்டால்கோ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே அல்ட்ராடெக் சிமெண்ட், ஸ்ரீ சிமெண்ட்ஸ், பிரிட்டாணியா, இன்ஃபோசிஸ், டாடா கன்சியூமர் புராடக்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டிஸ், ஓ.என்.ஜி.சி, ஹெச்.டிஎஃப்.சி, இந்தஸிந்த் வங்கி, எஸ்பிஐ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே, அல்ட்ராடெக் சிமெண்ட், இன்ஃபோசிஸ், ஹெச்.சி.எல் டெக், நெஸ்டில், டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசராகவும் உள்ளன.
ரூபாய் மதிப்பு
இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 சரிவில், 73.63 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது முந்தைய அமர்வில் 73.51 ரூபாயாக முடிவடைந்திருந்தது.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 336.68 புள்ளிகள் அதிகரித்து, 49,543.15 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 112.75 புள்ளிகள் அதிகரித்து, 14,935.90 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
More From GoodReturns

சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!

ஒரே நாளில் ரூ14 லட்சம் கோடிக்கு மேல் லாபம்! சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்!ஏன் தெரியுமா?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

டிரம்ப் கொடுத்த ஸ்பீச்: ரத்தக்களரியான பங்குச் சந்தை? சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!



Click it and Unblock the Notifications