நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன. நேற்று ஹோலி என்பதால் இந்திய சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது.
பல சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் சந்தைகள் ஏற்றத்தில் காணப்படும் நிலையில், பல துறைகளின் வளர்ச்சி விகிதம் பற்றிய சாதகமான அறிவிப்புகள் வந்து கொண்டுள்ளன.
எனினும் இந்தியாவில் அதிகரித்து வரும் இரண்டாம் கட்ட பரவல், இன்னும் எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்தவுள்ளதோ என்ற கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. ஆக சந்தை தொடர்ந்து அழுத்தத்திலேயே காணப்படுகிறது. தற்போதைக்கு ஏற்றம் கண்டு இருந்தாலும், சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஏற்ற இறக்கம் தொடரலாம்
ஏனெனில் ஏற்கனவே கொரோனாவின் காரணமாக பொருளாதாரம் பலவீனமான நிலையினை அடைந்து, தற்போது தான் மீண்டு வர ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக பொருளாதாரம் மீண்டும் என்ன ஆகுமோ என்ற கவலையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் கமாடிட்டிகளின் விலையும் அதிகரிக்கலாம் என்ற கவலையும் எழுந்துள்ளது. ஆக சந்தையில் ஏற்ற இறக்கம் தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.
இந்திய சந்தைகள் தொடக்கம்
இதற்கிடையில் இன்று இந்திய சந்தைகள் ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 224.79 புள்ளிகள் அதிகரித்து, 49,233.29 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 145.90 புள்ளிகள் அதிகரித்து, 14,653.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 398.91 புள்ளிகள் அதிகரித்து, 49,407.41 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 133.60 புள்ளிகள் அதிகரித்து, 14,640.90 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுயத்து 1042 பங்குகள் ஏற்றத்திலும், 261 பங்குகள் சரிவிலும், 77 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் பச்சை நிறத்திலும் காணப்படுகின்றது. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள டைட்டன் நிறுவனம், ஜேஎஸ்டபள்யூ ஸ்டீல், கெயில், ஹெச்யுஎல், டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே எம் &எம், பிபிசிஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டைட்டன் நிறுவனம், ஹெச்யுஎல், ஓஎன்ஜிசி, என்டிபிசி, பவர் கிரிட் கார்ப் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே எம் & எம் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 671.58 புள்ளிகள் அதிகரித்து, 49,680.08 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 207.55 புள்ளிகள் அதிகரித்து, 14,714.85 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications