தொடர்ந்து முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, இந்திய சந்தைகள் இன்றும் உச்சத்தினை தொட்டுள்ளன.

அமெரிக்காவின் கருவூல செயலாளர் ஜேனட் எல்லன், உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தினை மீட்டெடுக்க மறறொரு மிகப்பெரிய ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் என்று வாதிட்டார். இது கொரோனாவினால் முடங்கியுள்ள பொருளாதாரத்தினை மீட்டெடுக்க பயன்படும் என்றும் வாதிட்டார். இந்நிலையில் கொரோனாவின் காரணமாக சரிவினைக் கண்டுள்ள பொருளாதாரத்தினை இது பயனுள்ளதாக இருக்கும் என்றும், இதன் மூலம் டாலரின் மதிப்பும் வலுவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் சர்வதேச சந்தைகள் ஏற்றத்தில் உள்ளன. ஆசிய சந்தைகளும் வரலாற்று உச்சத்தில் உள்ளன. இதன் எதிரொலியாக இந்திய சந்தையும் ஏற்றத்தில் உள்ளது.
இதற்கிடையில் இன்று ப்ரீ ஒபனிங் சந்தையிலேயே ஏற்றத்தில் தான் காணப்பட்டது. இதனையடுத்து சந்தையின் தொடக்கத்தில் சென்செக்ஸ் 39.97 புள்ளிகள் அதிகரித்து, 49,438.26 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 12 புள்ளிகள் அதிகரித்து, 14,533.20 புள்ளிகள் ஆகவும் தொடங்கியது. இதில் 846 பங்குகள் ஏற்றத்திலும், 345 பங்குகள் சரிவிலும், இதே 63 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்படுகிறது.
பிஎஸ்இ ஆயில் & கேஸ், நிஃப்டி பிஎஸ்இ குறியீடுகள் தவிர, மற்றவை பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றது.
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள டாடா மோட்டார்ஸ், விப்ரோ, ஹெச்சிஎல் டெக், ஈச்சர் மோட்டார்ஸ், டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே கிரசிம், ஸ்ரீ சிமெண்ட்ஸ், என்டிபிசி, ஐடிசி, கோல் இந்தியா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டெக் மகேந்திரா, ஹெச்சிஎல் டெக் , இன்ஃபோசிஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே என்டிபிசி, ஐடிசி, ஹெச்டிஎஃப்சி, பவர் கிரிட் கார்ப், கோடக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு பெரியளவில் மாற்றமில்லாமல் சற்று அதிகரித்து 73.11 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது முநதைய அமர்வில் 73.17 ரூபாயாக முடிவடைந்திருந்தது.
இதற்கிடையில் தற்போது சர்வதேச சந்தையின் எதிரொலியாக சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. இது தற்போது சென்செக்ஸ் 248.56 புள்ளிகள் அதிகரித்து, 49,646.85 ஆகவும், இதே நிஃப்டி 84.20 புள்ளிகள் அதிகரித்து, 14,605.35 ஆகவும் காணப்படுகிறது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications