தொடர்ந்து முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, இந்திய சந்தைகள் இன்றும் உச்சத்தினை தொட்டு வருகின்றன. இன்று முதன் முறையாக 50,000 எட்டியுள்ளது.
இன்று ப்ரீ ஒபனிங் சந்தையிலேயே ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 211.40 புள்ளிகள் அதிகரித்து, 50.003 ஆகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 146 புள்ளிகள் ஏற்றம் கண்டு 14,790 ஆகவும் காணப்பட்டது.
இதனையடுத்து சந்தையின் தொடக்கத்தில் சென்செக்ஸ் முதன் முறையாக 50,000 மேல் தொடங்கியது. குறிப்பாக 223.17 புள்ளிகள் அதிகரித்து, 50,015.29 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 63 புள்ளிகள் அதிகரித்து, 14,707.70 புள்ளிகள் ஆகவும் தொடங்கியது. இதில் 1034 பங்குகள் ஏற்றத்திலும், 267 பங்குகள் சரிவிலும், இதே 68 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
என்ன காரணம்?
அமெரிக்காவின் பங்கு சந்தைகள் வரலாற்று உச்சத்தினை எட்டிய நிலையில் முடிவடைந்தன. இது புதிதாக பதவியேற்றுள்ள ஜோ பைடன், விரைவில் அமெரிக்காவின் பொருளாதாரத்தினை மீட்டெடுக்க மற்றொரு மிகப்பெரிய ஊக்கத்தொகை வழங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் டாலரின் மதிப்பும் வலுவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பச்சை நிறத்தில் பெரும்பாலான குறியீடுகள்
இதனால் மற்ற சர்வதேச சந்தைகள் ஏற்றத்தில் உள்ளன. குறிப்பாக ஆசிய சந்தைகளும் வரலாற்று உச்சத்தில் உள்ளன. இதன் எதிரொலியாக இந்திய சந்தையும் ஏற்றத்தில் உள்ளது.
பிஎஸ்இ மெட்டல்ஸ்,டெக், நிஃப்டி ஐடி, நிஃப்டி பிஎஸ்இ உள்ளிட்ட குறியீடுகள் தவிர, மற்றவை பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றது.
நிஃப்டியின் டாப் பங்குகள்
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள பஜாஜ் பின்செர்வ், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் பைனான்ஸ், யுபிஎல், ரிலையன்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே அதானி போர்ட்ஸ், டாடா ஸ்டீல், ஜேஎஸ்டபள்யூ ஸ்டீல், ஹிண்டால்கோ, டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸின் டாப் பங்குகள்
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பஜாஜ் பின்செர்வ், பஜாஜ் பைனான்ஸ், ரிலையன்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஹெச்டிஎஃப்சி, டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, டெக் மகேந்திரா, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம்
இதற்கிடையில் தற்போது இந்திய சந்தைகள் சர்வதேச சந்தையின் எதிரொலியாக சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. இது தற்போது சென்செக்ஸ் 288.90 புள்ளிகள் அதிகரித்து, 50,081.02 ஆகவும், இதே நிஃப்டி 77.25 புள்ளிகள் அதிகரித்து, 14,721.95 ஆகவும் காணப்படுகிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications