சற்றே ஆறுதல் தந்த இந்திய சந்தைகள்.. சென்செக்ஸ் 50,000 மேல் வர்த்தகம்..!

நடப்பு வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான இன்று, பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன.

கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் இந்திய சந்தைகள், இன்று ஏற்றத்தில் காணப்படுகிறது.

வலுவான சர்வதேச காரணிகளுக்கு மத்தியில், இந்திய சந்தைகள் இன்று சற்று கேப் ஆகி தொடங்கியுள்ளது.

சந்தைக்கு சாதகமான காரணிகள்

சந்தைக்கு சாதகமான காரணிகள்

குறிப்பாக அமெரிக்க பங்கு சந்தையானது ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது. இது அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்ற நிலையில் ஏற்றம் கண்டுள்ளது. அதோடு ஜிடிபி குறித்தான வளர்ச்சி மதிப்பீட்டினையும் அதிகரித்துள்ளது. ஆக இது டாலரின் மதிப்பு ஏற்றம் காண வழிவகுத்துள்ளது. இதுவும் சந்தைக்கு சாதகமாகவும் அமைந்துள்ளது.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 260.18 புள்ளிகள் அதிகரித்து, 50,061.80 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 131 புள்ளிகள் அதிகரித்து, 14,852.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்திலும் சற்று ஏற்றத்தில் தான் தொடங்கியது. சென்செக்ஸ் 438.12 புள்ளிகள் அதிகரித்து, 50,239.74 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 134.60 புள்ளிகள் அதிகரித்து, 14,855.90 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1023 பங்குகள் ஏற்றத்திலும், 240 பங்குகள் சரிவிலும், 50 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பிஎஸ்இ ஹெல்த்கேர், பிஎஸ்இ டெக் தவிர, மற்ற குறியீடுகள் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ஹிண்டால்கோ, டாடா மோட்டார்ஸ், பஜாஜ் பைனான்ஸ், டாடா ஸ்டீல், அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், இன்ஃபோசிஸ், டிவிஸ் லேப்ஸ், விப்ரோ, ஹெச்சிஎல் டெக் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு


இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பஜாஜ் பைனான்ஸ், மாருதி சுசூகி, எம் & எம், எஸ்பிஐ, ஐடிசி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே இன்ஃபோசிஸ், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், ஹெச்சிஎல் டெக், சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சந்தையில் தற்போதைய நிலவரம்

சந்தையில் தற்போதைய நிலவரம்

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 72.48 ரூபாயாக பெரியளவில் மாற்றமின்றி தொடங்கியுள்ளது. இதன் முந்தைய அமர்வின் முடிவு விலையானது 72.54 ரூபாயாகும்.

இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 298.81 புள்ளிகள் அதிகரித்து, 50,100.43 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 79.20 புள்ளிகள் அதிகரித்து, 14,800.50 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+