நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன. கடந்த அமர்வில் பலத்த சரிவினைக் கணடு முடிவடைந்தது. இதற்கிடையில் இந்த வாரத்தில் சற்று ஏற்ற இறக்கத்துடன் இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
நடப்பு வாரத்தில் எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி இருப்பதால் முதலீட்டாளர்கள் தங்களது லாபத்தினை புக் செய்யலாம். அல்லது ரோலோவர் செய்யலாம். இதனால் சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகரிக்கும். ஆக முதலீட்டாளர்கள் கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது.
தற்போது பணவீக்கம் அதிகரிக்குமோ என்ற கவலையும் எழுந்துள்ளது.அதோடு கொரோனாவின் இரண்டாம் கட்ட பரவலும் அதிகரித்து வருகிறது.
இந்திய சந்தைகள் தொடக்கம்
அமெரிக்க சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்ததையடுத்து, ஆசிய சந்தைகளும் ஏற்றத்தில் காணப்படுகின்றன. இதன் எதிரொலியாக இந்திய சந்தையும் ஏற்றத்தில் காணப்படுகிறது. குறிப்பாக இன்று தொடக்கத்தில் சென்செக்ஸ் 151.50 புள்ளிகள் அதிகரித்து, 49,922.79 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 46.40 புள்ளிகள் அதிகரித்து, 14,782.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் நிறத்திலேயே காணப்படுகின்றது. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள டாடா மோட்டார்ஸ், யுபிஎல், அதானி போர்ட்ஸ், டிவிஸ் லேப், இந்தஸிந்த் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஐஓசி, பவர் கிரிட் கார்ப், பிரிட்டானியா, கோடக் மகேந்திரா, டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள மாருதி சுசூகி, இந்தஸிந்த் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, டைட்டன் நிறுவனம், ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பவர் கிரிட் கார்ப், டெக் மகேந்திரா, என்டிபிசி, கோடக் மகேந்திரா, ஹெச்டிஎஃப்சி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சந்தையில் தற்போதைய நிலவரம்
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 174.15 புள்ளிகள் அதிகரித்து, 49,945.44 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 56.20 புள்ளிகள் அதிகரித்து, 14,792.60 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
குறைந்துள்ள அமெரிக்க பத்திர லாபம், தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகள் உள்ளிட்ட பல சர்வதேச காரணிகளால் சந்தை இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது.
More From GoodReturns

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

ஒரே நாளில் ரூ14 லட்சம் கோடிக்கு மேல் லாபம்! சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்!ஏன் தெரியுமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?



Click it and Unblock the Notifications