500 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் சென்செக்ஸ்.. நிஃப்டி 15,800 அருகில் வர்த்தகம்.. ஜாக்பாட் தான்!

நடப்பு வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான இன்று, பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் இந்திய சந்தைகள் ஏற்றத்தில் காணப்படுகின்றன.

கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே சற்று சரிவினைக் கண்டு வந்த இந்திய சந்தைகள், இன்றும் சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது.

இந்திய சந்தையானது சரியும்போது முதலீடு செய்யலாம் என்று நிபுணர்கள் தொடர்ந்து கூறி வரும் நிலையில், கடந்த சில தினங்களாகவே சரிந்து வந்த நிலையில், இன்று சந்தை மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.

கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள்

கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள்

பல வலுவான சர்வதேச காரணிகளுக்கு மத்தியில், அதிகரித்து வரும் புதிய வகை கொரோனாவின் தாக்கம், இன்னும் எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. எனினும் கடந்த அமர்வில் அமெரிக்க பங்கு சந்தையானது ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது. இதன் காரணமாக இன்று ஆசிய சந்தைகளும் ஏற்றத்தில் காணப்படுகின்றன. இதந் எதிரொலியாக இந்திய சந்தைகளும் ஏற்றத்தில் காணப்படுகிறது.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்திலும் சற்று ஏற்றத்தில் தான் தொடங்கியது. குறிப்பாக சென்செக்ஸ் 380.66 புள்ளிகள் அதிகரித்து, 52,579.17 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 112.10 புள்ளிகள் அதிகரித்து, 15,744.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1,741 பங்குகள் ஏற்றத்திலும், 258 பங்குகள் சரிவிலும், 79 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

இன்டெக்ஸ் நிலவரம்

இன்டெக்ஸ் நிலவரம்

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் ஏற்றத்தில் காணப்படுகின்றன. குறிப்பாக பிஎஸ்இ மெட்டல்ஸ், பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள் உள்ளிட்ட குறியீடுகள் 2% மேலாகவும், பேங்க் நிஃப்டி, நிஃப்டி ஐடி, பிஎஸ்இ ஸ்மால் கேப், பிஎஸ்இ கேப்பிட்டல் கூட்ஸ் உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாகவும், மற்ற குறியீடுகள் 1% கீழாகவும் ஏற்றம் கண்டுள்ளன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீட்டில் உள்ள பஜாஜ் பைனான்ஸ், ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல்ஸ், டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ, டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹீரோமோட்டோ கார்ப், பவர் கிரிட் கார்ப், ஏசியன் பெயிண்ட்ஸ்,சிப்லா, ஈச்சர் மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பஜாஜ் பைனான்ஸ், டாடா ஸ்டீல், டைட்டன் நிறுவனம், ஐசிஐசிஐ வங்கி, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பவர் கிரிட் கார்ப், ஏசியன் பெயிண்ட்ஸ், ஹெச்சிஎல் டெக் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சந்தையில் தற்போதைய நிலவரம்

சந்தையில் தற்போதைய நிலவரம்

இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 515.86 புள்ளிகள் அதிகரித்து, 52,714.37 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 157.40 புள்ளிகள் அதிகரித்து, 15,789.50 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

இதற்கிடையில் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பானது 18 பைசா அதிகரித்து, 74.43 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது முந்தைய அமர்வில் 74.61 ரூபாயாக முடிவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா மூன்றாம் அலையின் அச்சத்தினால் சந்தைகள் மீடியம் டெர்மில் சற்று சரியும் விதமாகவே காணப்படுகிறது. ஆக முதலீட்டாளர்கள் கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+