நடப்பு வாரத்தில் மூன்றாவது வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன. இது முதலீட்டாளர்கள் மத்தியில் சற்றே ஆறுதலை கொடுத்துள்ளது.
இது தொடக்கத்தில் சற்று பெரிய மாற்றம் இல்லாமல் பிளாட்டாக தான் தொடங்கியது. இது தொடர்ந்து சர்வதேச சந்தையில் நிகழும் பல மாற்றங்களுக்கு மத்தியில், பணவீக்கம் அதிகரிக்குமோ என்ற கவலையை எழுப்பியுள்ளது.
எனினும் அமெரிக்க பங்கு சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்த நிலையில், ஆசிய சந்தைகள் சிலவும் ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. இதற்கிடையில் இந்திய சந்தைகளும் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன.

இந்திய சந்தைகள் தொடக்கம்
குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 294.04 புள்ளிகள் அதிகரித்து, 51,319.52 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 165.10 புள்ளிகள் அதிகரித்து, 15,263.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 374.65 புள்ளிகள் அதிகரித்து, 51,400.13 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 109.20 புள்ளிகள் அதிகரித்து, 15,207.60 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 1128 பங்குகள் ஏற்றத்திலும், 243 பங்குகள் சரிவிலும், இதே 43 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பிஎஸ்இ ஆயில் & கேஸ், நிஃப்டி பிஎஸ்இ குறியீடுகள் தவிர, மீதமுள்ள அனைத்து குறியீடுகளும் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ஈச்சர் மோட்டார்ஸ், டாடா மோட்டார்ஸ், ஜே எஸ் டபள்யூ ஸ்டீல், இந்தஸிந்த் வங்கி, பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஓஎன்ஜிசி, எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், யுபிஎல், ஹெச்டிஎஃப்சி லைஃப், கோல் இந்தியா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள இந்தஸிந்த் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், டைட்டன் நிறுவனம், சன் பார்மா, டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஓஎன்ஜிசி, நெஸ்டில், ஐடிசி, என்டிபிசி, கோடக் மகேந்திரா பஜாஜ்

ரூபாய் மதிப்பு
இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு பெரியளவில் மாற்றமின்றி 72.96 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது முந்தைய அமர்வில் 72.93 ஆக முடிவடைந்திருந்தது.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 191.40 புள்ளிகள் அதிகரித்து, 51,216.88 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 52.35 புள்ளிகள் அதிகரித்து, 15,150.75 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.