நடப்பு வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான இன்று, பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில், இந்திய சந்தையில் இன்று எஃப்&ஓ எக்ஸ்பெய்ரி என்பதாலும் சந்தையில் பலமான ஏற்ற இறக்கம் காணப்படுகிறது.
கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் இந்திய சந்தைகள், இன்று எப்படி உள்ளது வாருங்கள் பார்க்கலாம்.
கடந்த அமர்வில் அமெரிக்க பங்கு சந்தையானது ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து ஆசிய பங்கு சந்தைகளும் ஏற்றத்தில் தான் இன்று காலையில் தொடங்கியுள்ளன. இதற்கிடையில் இந்திய சந்தையும் இன்று காலை தொடக்கத்தில் சற்று ஏற்றத்தில் தான் தொடங்கியது.
சந்தைக்கு சாதகமான காரணிகள்
வர்த்தகர்கள் இந்த வாரத்தில் வெளியாகவிருக்கும் அமெரிக்காவின் பணவீக்கம் குறித்தான டேட்டா குறித்து கவனித்துக் கொண்டுள்ளனர் எனலாம். ஏனெனில் ஒரு வேளை இது சந்தைக்கு எதிராக வந்தால் சர்வதேச பங்கு சந்தைகள் சரிவினைக் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இந்த கூட்டத்தில் வட்டி விகிதம் பற்றியும் விவாதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தைகள் தொடக்கம்
குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. சென்செக்ஸ் 223.26 புள்ளிகள் அதிகரித்து, 51,240.78 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 13.10 புள்ளிகள் அதிகரித்து, 15,288.40 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்திலும் சற்று ஏற்றத்தில் தான் தொடங்கியது. சென்செக்ஸ் 11.78 புள்ளிகள் அதிகரித்து, 51,029.30 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 4.20 புள்ளிகள் அதிகரித்து, 15,305.70 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1235 பங்குகள் ஏற்றத்திலும், 360 பங்குகள் சரிவிலும், 62 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பிஎஸ்இ சென்செக்ஸ், பேங்க் நிஃப்டி, பிஎஸ்இ கேப்பிட்டல் கூட்ஸ், பிஎஸ்இ ஹெல்த்கேர், நிஃப்டி பிஎஸ்இ தவிர, மற்ற குறியீடுகள் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள டெக் மகேந்திரா, விப்ரோ, டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ், பிபிசிஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்செர்வ், ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், ஹெச்.யு.எல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டெக் மகேந்திரா, டிசிஎஸ், ஐடிசி, இன்ஃபோசிஸ், ஹெச்.சி.எல் டெக் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்செர்வ், ஏசியன் பெயிண்ட்ஸ், ஹெச்.யு.எல், ஹெச்.டி.எஃப்.சி வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம்
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 72.75 ரூபாயாக பெரியளவில் மாற்றமின்றி தொடங்கியுள்ளது.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 18.18 புள்ளிகள் அதிகரித்து, 51,035.70 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 17 புள்ளிகள் அதிகரித்து, 15,318 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!



Click it and Unblock the Notifications