மாதத்தின் முதல் நாளே நல்ல ஏற்றம்.. சென்செக்ஸ் 52,000 மேல் வர்த்தகம்.. !

ஜூன் மாதத்தின் தொடக்க வர்த்தக நாளான இன்று இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன.

இது கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை எழுந்துள்ளது. இது சரிவில் இருக்கும் பொருளாதார வளர்ச்சியினை மீட்டெடுக்க உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக நாடு முழுவதும் தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகின்றன. இதுவும் சந்தைக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.

ஜிடிபி எதிர்ப்பார்ப்பினை விட சற்று ஏற்றம்

ஜிடிபி எதிர்ப்பார்ப்பினை விட சற்று ஏற்றம்

கடந்த 2020 - 21ம் நிதியாண்டில் பொருளாதாரம் மோசமாக சரிவினைக் கண்டிருந்தாலும், முதல் இரண்டு காலண்டில் சரிவிலும், இரண்டாம் பாதியில் சற்று ஏற்றம் கண்டும் கானப்பட்டது. இதனால் ஒட்டுமொத்த தாக்கம் என்பது சற்றே குறைந்துள்ளது எனலாம். இது நிபுணர்களின் கணிப்பினை விட சற்றே ஆறுதல் தரும் விதமாக சற்றே சரிவு குறைந்துள்ளது, சந்தைக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 138.30 புள்ளிகள் அதிகரித்து, 52,075.74 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 32.70 புள்ளிகள் அதிகரித்து, 15,615.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 93.36 புள்ளிகள் அதிகரித்து, 52,030 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 26.40 புள்ளிகள் அதிகரித்து, 15,609.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 1192 பங்குகள் ஏற்றத்திலும், 317 பங்குகள் சரிவிலும், 69 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பிஎஸ்இ மெட்டல்ஸ், பிஎஸ்இ டெக், நிஃப்டி ஐடி தவிர, மற்றவை அனைத்தும் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள பஜாஜ் ஆட்டோ, ஹெச்.டி.எஃப்.சி, எஸ்பிஐ, ரிலையன்ஸ், ஸ்ரீ சிமெண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டாடா ஸ்டீல், ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஹிண்டால்கோ, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பஜாஜ் ஆட்டோ, ஹெச்.டிஎஃப்.சி, ரிலையன்ஸ், எஸ்.பி.ஐ, ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே டிசிஎஸ், இன்ஃபோசிஸ், நெஸ்டில், அல்ட்ராடெக் சிமெண்ட், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சர்வதேச சந்தையில் நிலவும் சாதகமான காரணிகள்

சர்வதேச சந்தையில் நிலவும் சாதகமான காரணிகள்

சர்வதேச சந்தையில் நிலவி வரும் பல சாதகமான காரணிகள், கொரோனா தாக்கம் குறைவு, என பலவும் சந்தையில் முதலீடுகளை ஊக்குவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் சந்தைக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்படும் நிலையில், சந்தையானது தொடர்ந்து வரலாற்று உச்சத்தினை எட்டி வருகின்றது.

தற்போதைய நிலவரம்

தற்போதைய நிலவரம்

தற்போது மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 155.10 புள்ளிகள் அதிகரித்து, 52,092.54 புள்ளிகளாகவும், இதே தேசிய பங்கு சந்தையின் குறியீட்டெண் நிஃப்டி 33 புள்ளிகள் அதிகரித்து, 15,616.95 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+