நடப்பு வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான இன்று, பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன.
கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே ஏற்ற இறக்கத்தினை கண்டு வந்த சந்தைகள் இன்று ஏற்றத்தில் காணப்படுகிறது.
வலுவான சர்வதேச காரணிகள், கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், இந்திய சந்தைகள் இன்று சற்று ஏற்றத்தில் தொடங்கியுள்ளன.
இந்திய சந்தைகள் தொடக்கம்
குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 177.10 புள்ளிகள் அதிகரித்து, 52,026.58 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 32.50 புள்ளிகள் அதிகரித்து, 15,608.70 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்திலும் சற்று ஏற்றத்தில் தான் தொடங்கியது. சென்செக்ஸ் 268.36 புள்ளிகள் அதிகரித்து, 52,117.84 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 82.20 புள்ளிகள் அதிகரித்து, 15,658.40 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1528 பங்குகள் ஏற்றத்திலும், 278 பங்குகள் சரிவிலும், 51 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள நிஃப்டி ஆட்டோ தவிர, மற்ற குறியீடுகள் சற்று ஏற்றத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள டைட்டன் நிறுவனம், ஓ,என்,ஜி,சி, கோடக் மகேந்திரா, ரிலையன்ஸ், ஹெச்.டி.எஃப்.சி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே யுபிஎல், சிப்லா, பஜாஜ் ஆட்டோ, எஸ்பிஐ, டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டைட்டன் நிறுவனம், ஒ.என்.ஜி.சி, கோடக் மகேந்திரா, ரிலையன்ஸ், ஹெச்.டி.எஃப்.சி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பஜாஜ் ஆட்டோ, எஸ்பிஐ, டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டீஸ், ஹெச்.யு.எல், டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சந்தையில் தற்போதைய நிலவரம்
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 279.45 புள்ளிகள் அதிகரித்து, 52,128.93 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 75.95 புள்ளிகள் அதிகரித்து, 15,648.55 புள்ளிகளாகவும் காணப்படுகிறது. இது அமெரிக்க சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்த நிலையில், ஆசிய சந்தைகள் ஏற்றத்தில் காணப்படுகின்றன.


Click it and Unblock the Notifications