நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்றும், பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன.
கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் இந்திய சந்தைகள், இன்று சாதகமான சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் பெரியளவில் மாற்றமின்றி ஏற்றத்தில் உள்ளது.
கொரோனாவினால் சரிவினைக் கண்டுள்ள பொருளாதாரம் மீண்டு வர, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், அதற்கு இன்னும் சிறிது காலம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புதிய வகை கொரோனா பரவலானது இன்னும் எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்துமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
இந்திய சந்தைகள் தொடக்கம்
குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 249.33 புள்ளிகள் அதிகரித்து, 52,798.99 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 38 புள்ளிகள் குறைந்து, 15,710.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்திலும் சற்று ஏற்றத்தில் தான் தொடங்கியது. சென்செக்ஸ் 212.52 புள்ளிகள் அதிகரித்து, 52,762.18 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 61.90 புள்ளிகள் அதிகரித்து, 15,810.40 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 1553 பங்குகள் ஏற்றத்திலும், 554 பங்குகள் சரிவிலும், 64 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பி.எஸ்.இ ஆயில் & கேஸ் தவிரம், மற்றவை பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ஜே.எஸ்.டபள்யூ, இன்ஃபோசிஸ், டெக் மகேந்திரா, டாடா ஸ்டீல், டிவிஸ் லேப் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பவர் கிரிட் கார்ப், அதானி போர்ட்ஸ், ஸ்ரீ சிமெண்ட்ஸ், என்.டி.பி.சி, கிரசிம் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள இன்ஃபோசிஸ், டாடா ஸ்டீல், டெக் மகேந்திரா, டிசிஎஸ், ரிலையன்ஸ் டாப் கெயினர்களாகவும், இதே பவர் கிரிட் கார்ப், என்டிபிசி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, பஜாஜ் பின்செர்வ், கோடக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சந்தையில் தற்போதைய நிலவரம்
தற்போது சென்செக்ஸ் 187.3 புள்ளிகள் அதிகரித்து, 52,736.96 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 54.95 புள்ளிகள் அதிகரித்து, 15,803.40 புள்ளிகளாகவும் காணப்படுகிறது. இது இன்னும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.
More From GoodReturns

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

ஒரே நாளில் ரூ14 லட்சம் கோடிக்கு மேல் லாபம்! சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்!ஏன் தெரியுமா?

சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

டிரம்ப் கொடுத்த ஸ்பீச்: ரத்தக்களரியான பங்குச் சந்தை? சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications